Advertisment

Vijay TV Serial; ஹேமாவுக்கு டாக்டர் சொல்லும் மருந்து… பாரதியின் முடிவு என்ன?

Vijay TV barathikannamma serial today episode lakshmi visits hema: லட்சுமியைப் பார்த்ததும் சந்தோஷப்படும் ஹேமா, கண்ணம்மா கூட ஒரு வாரத்திற்கு ஹேமா இருக்கனும் - டாக்டர் அட்வைஸ் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
Jul 21, 2021 15:24 IST
Vijay TV Serial; ஹேமாவுக்கு டாக்டர் சொல்லும் மருந்து… பாரதியின் முடிவு என்ன?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ஹேமாவுக்காக வந்ததற்காக நன்றி சொல்கிறார் வேணு. அப்போது அங்கு வரும் அஞ்சலியிடம் குழந்தையைப் பற்றிக் கேட்கிறாள் கண்ணம்மா. ஹேமா சமையல் அம்மானு உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்குறது எனக்கே பொறாமையா இருக்கு என்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு துளசியுடன் வருகிறாள் லட்சுமி. லட்சுமியைக் கண்டதும் ஆச்சரியமாகிறாள் சௌந்தர்யா. ஹேமாவை பார்க்க வந்ததாக லட்சுமி கூற, ஹேமாவிடம் அழைத்துச் செல்கிறாள் சௌந்தர்யா.

லட்சுமியை பார்த்ததும் சந்தோஷமாகிறாள் ஹேமா. ஹேமாவிடம் நலம் விசாரிக்கிறாள் லட்சுமி. அப்போது சௌந்தர்யா, ஹேமாவையும் லட்சுமியையும் பிறந்தபோது பிரித்தை நினைவு கூறுகிறாள். பின்னர் ஹேமா லட்சுமியிடம் தான் அமெரிக்கா போகப்போவதில்லை என சொல்கிறாள். இதைக்கேட்டதும் துள்ளிக்குதிக்கிறாள் லட்சுமி. பின்னர் லட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்புகிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்து வழியில், ஆட்டோவில், ஹேமா அமெரிக்கா போகததால் ஜாலியாக இருப்பதாக சொல்கிறாள் லட்சுமி. ஹேமாவுக்காக ஹாஸ்பிட்டல் போனதற்கு ஆட்டோ டிரைவர் கண்ணம்மாவை பாராட்டுகிறார். அன்பு தான் ஹேமாவ என்னோட நெருங்க வச்சிருக்கு என சொல்கிறாள் கண்ணம்மா.

அடுத்ததாக, ஹேமாவுக்கு சாப்பாடு ஊட்டுகிறாள் சௌந்தர்யா. அப்போது சமையல் அம்மா எங்க என கேட்கும் ஹேமா, அவங்க ஊட்டி விட்டதான் சாப்பிடுவேன் என சொல்கிறாள். சமையல் அம்மா ஏதோ வேலை இருக்குனு கிளம்பிட்டாங்க என சௌந்தர்யா சமாளிக்க, இல்லை பொய் சொல்றீங்க, அப்பாவுக்கு சமையல் அம்மாவை புடிக்காது, அவருதான் வெளியே அனுப்பிருப்பாரு என்கிறாள் ஹேமா. அப்பா எதுவும் சொல்லல, நீ சாப்பிடு என சௌந்தர்யா சொல்ல, சமையல் அம்மாவை வரச்சொல்லுங்க என்கிறாள் ஹேமா. இதைக்கேட்டு எரிச்சலடைகிறாள் வெண்பா. ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே சமையல் அம்மா வீட்டுக்கு போகலாம் என வேணு சமாதானம் செய்கிறார்.

publive-image

அப்போது, டாக்டர் பிரியா, ஹேமாவுக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு அவள வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என சொல்ல, அதிர்ச்சியாகிறான் பாரதி. காய்ச்சல் அதிகமா இருக்கும்போது வீட்டுக்கு போகனுமா என கேட்கிறான். அதற்கு டாக்டர், காய்ச்சல் இங்க இருந்தாலும் குறையாது. அவ மனசுல நிறைய ஆசை இருக்கு. இவளோட நோய்க்கு மருந்து சமையல் அம்மா தான். மேலும் ஒரு வாரம் சமையல் அம்மா கண்டிப்பா ஹேமா கூட இருக்கனும் என உறுதியாக சொல்கிறார். இதைக்கேட்டு டென்ஷனாக வெளியே போகிறான் பாரதி.

publive-image

பின்னர் சௌந்தர்யாவிடம், சமையல் அம்மாவை கூப்பிட்டு வரச் சொல்கிறார் டாக்டர். அப்போது, இது நடக்க கூடாதுனு தான் நினைச்சேன் என புலம்புகிறாள் வெண்பா. பின்னர் ஹேமா, சமையல் அம்மா, அப்பா கூட வந்து இருக்க மாட்டாங்க என்கிறாள். சமையல் அம்மாவை கூட்டிட்டு வரவைக்கிறது என்னோட பொறுப்பு என ஆறுதல் சொல்கிறாள் சௌந்தர்யா. பின்னர் வெண்பாவிடம், நீ எதுவும் சொல்லலையா என கேட்க அதிர்ச்சியாகிறாள். பின்னர் ஹேமாவோட இந்த நிலைக்கு காரணமே பாரதி தான், அதுக்கு மருந்து இதுதான்னு டாக்டர் சொல்லிட்டாங்க, ஹேமாவுக்காக அந்த சமையல் அம்மாவ கூட்டிட்டு வா என்கிறாள் சௌந்தர்யா. எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Barathi Kannamma Serial #Today Episode #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment