New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathikannamma-aug-14-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode shocking news for barathi: கண்ணம்மா தான் லட்சுமியோட அம்மா என்று நிரூபிக்க திட்டம் போடும் பாரதி, அஞ்சலிக்கு என்ன ஆச்சு என பதறும் அவளின் அம்மா, அப்பா இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
லட்சுமியின் ஸ்கூல் நோட்டில், அம்மாவாக கண்ணம்மாவின் புகைப்படத்தை பார்த்த பாரதி அதிர்ச்சியாகிறான். லட்சுமி கண்ணம்மாவோட பொண்ணுனா, இவ்வளவு நாளா எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க என வெறுப்பாகிறான் பாரதி. லட்சுமி கண்ணம்மாவோட மகள்னு இன்னைக்கு எல்லார்க்கிட்டயும் நிரூபிக்கிறேன் என முடிவெடுக்கிறான் பாரதி.
அடுத்ததாக, ஹேமாவுடன் விளையாடி கொண்டிருக்கும் கண்ணம்மா, அமெரிக்கா போகலனா, அதே ஸ்கூல்ல படிக்கிறியானு கேட்க, அப்பாகிட்ட கேட்டு சொல்றேன் என சொல்கிறாள்.
அடுத்து, கண்ணம்மா தான் லட்சுமியோட அம்மானு நிரூபிக்க, ஹாஸ்பிட்டலில் வேலை பார்ப்பவர் மூலம், கண்ணம்மாவை ஹாஸ்பிட்டல் வர வைக்க ஏற்பாடு செய்கிறான் பாரதி. கண்ணம்மாவுக்கு போன் செய்து, லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லை என ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப் சொல்ல, பதறிப்போகும் கண்ணம்மா, உடனே ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறாள். இங்கு டாக்டர் பிரியா, லட்சுமிக்கு குணமாகிடுச்சு, வீட்டுக்கு கூட்டி போகலாம் என்று சொல்ல, லட்சுமி, ஹேமாவோட பிரண்ட் தான் நான் கூட்டிட்டு போறேன், அவங்க அம்மா வந்தா, நான் கூட்டிட்டு போனதா சொல்லு என சொல்கிறான். பின்னர் கண்ணம்மா லட்சுமியை தேடி வீட்டுக்கு வரட்டும் என, லட்சுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் பாரதி.
அடுத்ததாக, வெண்பா ஒத்துக் கொண்டதை நினைத்து நிம்மதி அடைகிறாள் அஞ்சலி. அப்போது அஞ்சலியின் அப்பாவும் அம்மாவும் வந்து அவளிடம் நலம் விசாரிக்கிறார்கள். என்ன பிரச்சனை என அம்மா கேட்க, ஒண்ணுமில்லை என அவர்களை சமாதானப்படுத்துகிறாள் அஞ்சலி. பின்னர் சௌந்தர்யாவும் சத்துக் குறைப்பாடுதான் வேற ஒண்ணுமில்லை என்று சொல்கிறாள். அடுத்து, அஞ்சலியின் அப்பா, நீ ஏதோ கவலையில் இருக்குற மாதிரி இருக்கு, அத விட்டு தள்ளு என ஆறுதல் சொல்கிறார்.
லட்சுமியை பார்க்க, ஹாஸ்பிட்டலுக்கு வருகிறாள் கண்ணம்மா. லட்சுமியின் அம்மாவாக கண்ணம்மாவைப் பார்த்ததும், ஆச்சரியப்படும் டாக்டர் பிரியா. பின்னர் கண்ணம்மாவிடம் வந்து, பாரதி உங்க பொண்ண, அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு என சொல்ல அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. பாரதி ஏன் கூட்டிட்டு போனான் என சந்தேகப்படும் கண்ணம்மா, பாரதி வீட்டுக்கு கிளம்புகிறாள்.
அடுத்து, பாரதி லட்சுமியை முகத்தை மூடி அவனது ரூமுக்கு அழைத்துச் செல்ல, எல்லோரும் ஹேமாவ ஏன் கூட்டிட்டு வந்த, என்ன விஷயம் என்று கேட்கிறார்கள். பாரதி கோபத்துடன், லட்சுமியை காட்ட, எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். சௌந்தர்யா பதற்றத்துடன் லட்சுமிக்கு என்ன ஆச்சு என கேட்க, அவளுக்கு உடம்பு சரியில்ல, அதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு, இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான் பாரதி. சரி, லட்சுமியை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்த என சௌந்தர்யா கேட்க, லட்சுமியோட அம்மா யாருனு நான் தெரிஞ்சுக்க தான் இங்க கூட்டி வந்தேன் என சொல்கிறான். எல்லோரும் அதிர்ச்சியாக, இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.