New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/farina-pregnant.jpg)
Vijay TV barathikannamma serial venba farina announce her pregnancy to fans: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரினா கர்ப்பம்; இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மூலம் அறிவித்த வெண்பா
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரினா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ஃபரினா. அந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘தறி’ சீரியலில் நடித்துள்ளார் ஃபரினா. ஜீ தமிழ் டிவியில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியிலும் ஃபரினா பங்கேற்றுள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அதில் மருத்துவர் வெண்பாவாக நடிக்கும் ஃபரினா, ஏற்கனவே திருமணமான மருத்துவர் பாரதியை ஒரு தலையாக காதலிப்பவராக நடிக்கிறார். தன் காதலை அடைவதற்காக வெண்பா எடுக்கும் வில்லத்தனமான முயற்சிகள் சீரியலை சுவாரஸ்யாக கொண்டு செல்கிறது.
ஃபரினா, ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதிகள் விரைவில் பெற்றோர்கள் ஆக போகிறார்கள். தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
அதில், “கர்ப்பமாக உள்ளேன், இன்னும் 3 மாதங்கள் உள்ளது, குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம், 4 வருட கனவு நனவாகியுள்ளது, எல்லோரும் எங்களை வாழ்த்துங்கள்” என ஃபரினா பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் வெண்பா, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் சமூக வலைதளம் மூலமே வெளிப்படுத்தியுள்ளார். ஃபரினாவுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.