scorecardresearch

கவனம் ஈர்க்கும் அமீர் – பாவனி: களை கட்டும் பி.பி.ஜோடிகள்

தற்போது ஒளிபரப்பாகி வரும் பி.பி.ஜோடிகள் நிகழ்ச்சியில் ரொமான்ஸ் நடனத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகினறனர்.

கவனம் ஈர்க்கும் அமீர் – பாவனி: களை கட்டும் பி.பி.ஜோடிகள்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைரல் ஜோடியாக வலம் வந்த அமீர் பாவனி ஜோடி தற்போது பி.பி.ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

விஜய் டிவியின் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் எவ்வித தொடர்பும் இல்லாமல பிக்பாஸ் சொல்லும் டாஸ்கை முடிக்கும் பரபரப்பான இந்த விளையாட்டு மூலம் பலர் பிரபலமாகியுள்ளனர்

அதே சமயம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பல ஜோடிகள் உள்ளனர். அந்த வகையில் கடந்த சீசனில் கவனம் ஈர்த்த ஜோடிதான் அமீர் பாவனி ஜோடி. ஏற்கனவே திருமணமாகி தனது கணவனை பறிகொடுத்த பாவனி தனது சோக கதையை பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் சொல்லும்போதே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.

இவரின் வாழக்கை நிலையை தெரிந்துகொண்டு பிக்பாஸ் வீ்ட்டில் இருந்த பல போட்டியாளர்கள் அனுதாபத்தை காட்டிய நிலையில், வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் ஒரு படி மேலே சென்று பாவனியுடன் நெருக்கம் காண்பித்தார். அதுவரை ஏனோதானே என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமீர் வருகைக்கு பின் இளமை துள்ளளுடன் அரங்கேறியது.

இவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும் ரசிகர்களும் அமீர் பாவனி இருவரும் காதலிப்பதாக சொல்லிவந்தனர். அதற்கு ஏற்றார்போல் அவர்களும்நடந்து கொண்டனர். இதனடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது என இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பி.பி.ஜோடிகள் நிகழ்ச்சியில் ரொமான்ஸ் நடனத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகினறனர். தற்போது வெளியாகியுள்ள பி.பி.ஜோடிகள் ப்ரமோவில், வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடியது வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்த எபிசோடு எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bb jodigal reality show amir bavani pair dance viral on social media