மேடைக்கு அழைத்த பாரதி… ஓடி ஒளிந்த கண்ணம்மா… சந்திப்பு நடக்குமா?

பள்ளி ஆண்டுவிழாவில், பாரதி சௌந்தர்ய லட்சுமியின் தாய் கண்ணம்மாவை மேடைக்கு அழைக்கு அவளோ ஓடி ஒளிந்துகொள்கிறாள். அதனால், பாரதியும் கண்ணம்மாவும் சந்திப்பார்களா? ஒன்று சேர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணாம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சீரியல் என்று இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சி நிறுவனம் கணிப்பில் தெரிவித்திருந்தது.

டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்ளும் ஏழ்மையான கண்ணம்மா இருவரும் வெண்பா என்ற பெண்ணின் சூழ்சியால் பிரிந்து விடுகின்றனர். வெண்பா பாரதி மீது ஆசைப்படுகிறாள். அதனால், பாரதியையும் கண்ணம்மாவையும் சூழ்ச்சி செய்து பிரித்துவிடுகிறாள்.

சேர்ந்து வாழ்ந்தபோது கர்ப்பமான கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது. கண்ணம்மா மயக்கமாக இருந்தபோது, அதில் கருப்பாக இருந்தகுழந்தையை கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா எடுத்துச் சென்று வளர்க்கிறார். இது கண்ணம்மாவுக்கு தெரியாது. மற்றொரு குழந்தை கண்ணம்மாவுடன் வளர்கிறது. தனது வீட்டில் அம்மாவால் வளர்க்கப்படும் ஹேமா தனக்கு பிறந்த குழந்தைதான் என்பது பாரதிக்கும் தெரியாது. பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகள் கடந்துவிடுகிறது.

பாரதியை விட்டு பிரிந்து வாழும் கண்ணம்மா, ஹேமா படிக்கும் பள்ளியில் சமையல் வேலையில் சேர்கிறார். அங்கே ஹேமா கண்ணம்மாவுடன் அன்பாக நெருக்கமாகிறாள். ஹேமா வீட்டுக்கு அழைத்தபோது அங்கே சென்று பார்க்கும் கண்ணம்மா அது பாரதியின் வீடு என்பதை தெரிந்துகொண்டு, ஹேமா பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை என்று நினைத்துக் கொள்கிறாள். இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

இந்த சூழலில், ஹேமா படிக்கும் பள்ளியில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் செல்கிறார்கள். அந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கண்ணம்மாவிடம் வளரும் மற்றொரு குழந்தையான சௌந்தர்ய லட்சுமிக்கு பாரதி பரிசளிக்கிறான். அப்போது, இந்த குழந்தைக்கு கலெக்டர் ஆக வேண்டும் என லட்சியம். அதனால், இவளின் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று பாரதி கூறுகிறான். அப்போதுதான், கண்ணம்மாவிடம் வளரும் நம்முடைய மற்றொரு பேத்தி என்று பாரதியின் அம்மா சௌந்தர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், லட்சுமி தனது தாய் மீது அதிக பாசத்துடன் இருப்பதை அறிந்த பாரதி, “அம்மா மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் குழந்தையை நான் பார்த்ததே இல்லை. அந்த குழந்தையின் அம்மாவை மேடைக்கு அழைக்கலாமா? என்று பாரதி லட்சுமியின் அம்மாவை மேடைக்கு அழைக்கிறான். இதைக் கேட்ட கண்ணம்மா தான் யார் என்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஓடி ஒளிந்துகொள்கிறாள்.

பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த பரபரப்பு காட்சியால், பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்றாக சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேருவார்களா என்பது இனிவரும் எபிசோடுகள் மூலம் தெரியவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Vijay tv bharathi kannamma serial baharathi kannamma will meet and live together

Next Story
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com