பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த கண்ணம்மா: இது செமையா இருக்கே..!

தொலைக்காட்சி பார்வையாளர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியுல்ள நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்ணாம்மா பற்றிய மீம் செமையாக வைரலாகி வருகிறது.

vijay tv, bharathi kannamma serial, kannamma memes, kannamma memes on bigg boss season 4, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா மீம்ஸ், பிக் பாஸ், vijay tv bigg boss, kannamma bigg boss memes, tamil viral news, tamil tv serial news

தொலைக்காட்சி பார்வையாளர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியுல்ள நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்ணாம்மா பற்றிய மீம் செமையாக வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அசத்தாலாக எண்ட்ரி கொடுத்தனர். அதே நேரத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணமா சீரியலும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான ஒரு சீரியலாகும்.

அதனால், இந்த பாரதி கண்ணம்மா சீரியலை இது வரை பார்க்காத பார்வையாளர்களும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம், சீரியலின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரம் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா  நடந்துகொண்டே இருப்பதாக கதை அமைந்துள்ளது.  அதனால், கண்ணம்மா, பல எபிசோடுகளாக நடந்துகிட்டே இருக்கா.. பாவம் புள்ளத்தாச்சி பொம்பள என ட்ரோல் மீம்களால் ரசிகர்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

இந்த மீம்களைப் பார்ப்பவர்கள் பலரும் பாரதி கண்ணாம்மாவைப் பார்க்காதவர்கள்கூட பாத்துவிட வேண்டும் ஆவலால் உந்தப்பட்டுள்ளனர். சிலர் கண்ணம்மாவுக்கு வளைகாப்பு நடத்தி, பேறு காலம் பார்க்கவும் பல தாய்மார்கள் ஆயத்தமாகி விட்டனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா வீட்டை விட்டு பிரச்சனை காரணமாக கையில் பையை தூக்கிக் கொண்டு நிறைமாத கர்ப்பத்திலும் வெளியே கிளம்பி நடக்க ஆரம்பித்த நிலையில், சில எபிசோடுகள் அவர் நடப்பதையே காண்பித்ததை பார்த்த மீம் கிரியேட்டர்கள் கடுப்பாகி கலாய்க்கும் இந்த மீம்களால் கலாய்த்து வருகின்றனர்.

சிலர் கண்ணம்மா நடந்து நடந்து நிலாவுக்கே போய்விட்டாள் என்றும், சிலர் கண்ணம்மா நடந்து நடந்து நித்யானந்தாவின் கைலாவுக்கே போய்விட்டாள் என்றும் மரண கலாய் கலாய்த்து ஜாலியாக மீம் போட்டு மெர்சலாக்கி வருகின்றனர்.

இந்த மீம்களின் உச்சகட்டமாக, தற்போது கண்ணம்மா நடந்து, நடந்து கடைசியாக பிக்பாஸ் வீட்டுக்கும் வந்துவிட்டார். இங்கே கமல் சார் மத்த போட்டியாளர்களுடன் அவரையும் 100 நாட்கள் வைத்து பார்த்துக் கொள்வார். இங்கே அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், நல்லா இருப்பார் என்று நெட்டிசன்கள் வேற லெவல் கம்மெண்ட்டுகளுடன் மீம்கள் போட்டு தெறிக்கவிடுகின்றனர்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஷிவானி, பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannamma serial memes on bigg boss season 4

Next Story
நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதிactress Tamannaah Bhatia, Tamannaah Bhatia tests covid-19 positive, Tamannaah Bhatia tests for covid-19 positive, தமன்னா, நடிகை தமன்னா, தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி, கொரோனா வைரஸ், தமன்னாவுக்கு கொரோனா, Tamannaah Bhatia coronavirus positive, Tamannaah admitted in hospital, tamannaah bhatia admmitted hyderabad hostpital, tamannaah bhatia, tamil cinema news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com