சினிமாவில் நுழைந்த மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்: யாரு படம்னு பாருங்க!

விஜய் டிவில் ஒளிபரப்பாகிவரும் முன்னணி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay tv, bharathi kannamma serial, akil got chance to act in cinema, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, அகில், ரிஷிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு, பஹிரா, பிரபுதேவா, rishi got chance to act cinema, rishi got cinema chance in prabhu deva movie, bagheera movie, tamil cinema news

சினிமாவில் நடிக்க நோக்கத்துடன் வந்த பலரும், டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாகி பின்னர், சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து பெரியதிரையில் இடம் பிடிக்கிறார்கள். இது தமிழ் சினிமா உலகில் வழக்கமாக நடக்கிற ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

விஜய் டிவில் ஒளிபரப்பாகிவரும் முன்னணி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. பெரிய அளவில் பார்வையாளர்களால் விரும்பி பார்க்கப்படும் பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது.

டிவி சீரியல்கள் கொடி கட்டிப் பறக்கும் இந்த காலத்தில், சமூக ஊடகங்களின் வழியாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் சீரியல் நடிகர்கள் சினிமா நடிகர்களைவிட பிரபலமாக உள்ளனர். இந்த பிரபலமும் திறமையும் அவர்கள் சினிமாவில் நுழைவதற்கு பெரிய உதவிகரமாக அமைகிறது.

அந்த வகையில், டிவி சீரியல் பார்வையாளர்கள் இடையே பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் பலரும் அவர்களுடைய சொந்தப் பெயர்களால் அறியப்படுவதைவிட சீரியல் கதாபாத்திரங்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றனர். பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத் ரசிகர்கள் பாரதி என்ற கதாபாத்திரத்தின் பெயராலேயே அறியப்படுகிறார். அதே போல, கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் கண்ணம்மாவாகவே அறியப்படுகிறார். ஃபரினா ஆசாத் வில்லி பாத்திரம் வெண்பாவாகவே அறியப்படுகிறார். அப்படி, பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பி அகில் காதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் ரிஷி ரசிகர்கள் மத்தியில் அகில் என்றே அறியபடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அகிலுக்கு நடிகர் பிரபுதேவாவின் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் பிரபு தேவா நடிக்கும் பஹிரா படத்தில் நடிக்க ரிஷி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிகை அமிரா தஸ்துர் நடிக்கிறார். இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காதலன் ரிட்டர்ன்ஸ் என்ற வாசகத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கும் பஹிரா திரைப்படத்தில் பாரதி கண்ணம்மாவின் அகிலும் இணைந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannamma serial rishi character actor rishi got cinema chance in prabhu deva movie

Next Story
ரோஜா சீரியல் அர்ஜுன் ஷாக் அறிவிப்பு: இனி எந்த சீரியலும் நடிக்க மாட்டாராம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express