scorecardresearch

கண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி

“நான் சீரியலில் வரும் கண்ணம்மா கேரக்டரைப் போல் நிஜ வாழ்க்கையில் இல்லை. ஆனால், அந்த கேரக்டர் எனக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.” என்று பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினி ஹரிபிரியன் தெரிவித்துள்ளார்.

vijay tv, vijay tv serial, bharathi kannamma serial, bharathi kannamma, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா, ரோஷினி ஹரிபிரியன், கண்ணம்மா ரோஷினி, rohshini, roshini haripriyan, actress roshini haripriyan, tamil tv serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சிரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன், சினிமாவில் நடிக்க சிந்தித்ததாகவும் விரைவில் நல்ல வாய்ப்பு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக்கி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் அதன் கதையம்சத்தாலும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் நடிப்பாலும் பல சீரியல்களை முந்திக்கொண்டு அதிக பார்வையாளர்களைக் கொண்ட சீரியல் என்ற நிலையை அடைந்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய பாத்திரமான கண்ணம்மா பார்வையாளர்களால் மிக நெருக்கமாக உணரப்படுகிற பாத்திரமாக இருக்கிறார். 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் இந்த தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்.

ரோஷினி ஹரிபிரியன், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்காக தான் பார்த்துக்கொண்டிருந்த வங்கித் துறை வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்தவர். பாரதி கண்ணம்மா மூலம் புகழ்பெற்றுள்ள ரோஷினி தனது நிஜ வாழ்க்கையைப் பற்றியும் அடுத்த நகர்வைப் பற்றியும் கூறியுள்ளார்.

ரோஷினி ஹரிபிரியன் ஊடகங்களிடம் கூறுகையில், “பாரதி கண்ணம்மா சீரியல் நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலிப்பதுதான். அதே நேரத்தில், சீரியலில் நடப்பது போல, நிஜத்தில் இப்படியெல்லாமா நடக்கும் என்று சிலர் கேட்பது நியாமில்லாதது. நான் சென்னைப் பொண்ணு. இத்தனை ஆண்டுகளில் சீரியல்களில் பெண்களின் கதாபாத்திர வடிவமைப்பு மாறி வந்திருக்கிறது.

நான் சீரியலில் வரும் கண்ணம்மா கேரக்டரைப் போல் நிஜ வாழ்க்கையில் இல்லை. ஆனால், அந்த கேரக்டர் எனக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. தன்னை விமர்சிப்பவர்களுக்கு கண்ணம்மா கதாபாத்திரம் சரியான பதிலடி கொடுக்கும் என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஆனால், கண்ணம்மா பொறுமையாகத்தான் இருப்பாள். கண்ணம்மா கதாபாத்திரம் பொறுமையை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பொறுமையாக இருந்தால் நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியும் என்பதுதான் கண்ணம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம்.

சினிமாவில் நடிக்க வேண்டு என்ற ஆசை இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். சினிமாவில் வாய்ப்புக் கிடைக்குமா என்று நான் சிந்தித்ததுண்டு. விரைவில் நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்” என்று கண்ணம்மா ரோஷினி மனம் திறந்து பேசியுள்ளார்.

கண்ணம்மா ரோஷினியின் இந்த மனம் திறந்த பேச்சு அவர் விரைவில் வெள்ளித்திரைக்கு வருவார் என்று தெரிவிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bharathi kannamma serial roshini haripriyan like to act in cinema

Best of Express