வழுக்கி விழும் பாரதி.. தாங்கிப் பிடிக்கும் கண்ணம்மா.. டி.ஆர்.பி-க்காக ரூட்டு மாறும் விஜய் டிவி சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கை திணறடித்தது. ஆனால் போகபோக டிஆர்பி ரேட்டிங்கில் கடைசி இடம் கூட இந்த சீரியலுக்கு கிடைக்காது போல, அப்படி அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், தமிழக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது. அவ்வளவு ஏன்? ஒரூ குழந்தையை அழைத்துக் கேட்டால் கூட பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்று சொல்லும். அவ்வளவு பிரபலமாக இருந்த இந்த சீரியல் இன்று டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சரிவில் சென்று கொண்டிருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஸ்வீட்டி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களிடையே பிரபலமானது கொரோனாவுக்கு பின்னர் தான். கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு தொலைக்காட்சி தான் ஒரே பொழுதுபொக்காக இருந்தது.

அந்த சமயம் தான் பாரதி கண்ணம்மா சீரியல், பாரதியின் சந்தேகம், கண்ணம்மாவின் சுயமரியாதை போராட்டம் என பல திருப்பங்களுடன் பயணித்தது.  அதேநேரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில், ஆதியாக நடித்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து விலகினார். இதனால் ஆதி- பார்வதி ஜோடியை பார்த்து பழக்கப்பட்ட பலரும் ஏமாற்றமடைந்தனர். இதனால் பல ரசிகர்கள் செம்பருத்தி சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டு அதேநேரத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் உயரத்துக்கு சென்றது.

அதன்பிறகு என்ன தான் முயற்சி செய்தாலும் செம்பருத்தி சீரியலால், விட்ட பழைய டிஆர்பி இடத்தை பிடிக்க முடியவில்லை. இதே நிலைதான் இன்று பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் ஏற்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலை பலரும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் அதில் கண்ணம்மாவாக ரோஷினியின் நடிப்புத் தான்.

என்னதான் சீரியல் முழுவதும் ஒரே நெகட்டிவிட்டி இருந்தாலும், கண்ணம்மாவின் நடிப்புக்காகவே பலரும் அந்த சீரியலை விரும்பி பார்த்தனர். இப்போது சீரியலில் பழைய கண்ணம்மா இல்லை. பார்க்கும் படி கதையில் பெரிய திருப்பங்களும் இல்லை.

என்னதான் பழைய கண்ணம்மாவை போலவே ஒரு நடிகையை நடிக்க வைத்தாலும், ரசிகர்களால் கண்ணம்மாவில் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை. அதனால்தான் சீரியலில் ஒவ்வொரு ப்ரொமோ வெளியாகும் போது கமெண்ட்-களில் மிஸ் யூ கண்ணம்மா என ஸ்டேட்டஸ் போடுகின்றனர்.

இதை சீரியல் குழு யோசித்திருக்க வேண்டும் போல. இவ்வளவு நாள் பாரதியும்,, கண்ணம்மாவையும் எதிரியாக காட்டியது போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் போல. நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்கி பாரதி கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழ அவளுடைய வீட்டுக்கு செல்கிறான். இரவில் இருவரும் வெவ்வேறு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மழை பெய்து, வெள்ளத்தண்ணி வீட்டுக்குள் வருகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியில் எழுந்த பாரதி கண்ணம்மாவை போய் எழுப்புகிறான். தூங்கிக் கொண்டிருந்த கண்ணம்மா எழுந்து, இருவரும் வீட்டுக்குள் வரும் மழைத் தண்ணியை பக்கெட்டில் வாரி வெளியே ஊற்றுகின்றனர். அப்போது பாரதி தடுக்கிவிழ, கண்ணம்மா அவனை பிடித்துக் கொள்வது போல ப்ரொமோ முடிகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும், கண்ணம்மாவுக்கும், பாரதிக்கும் ரொமான்ஸ் ஆரம்பித்து விட்டது. எப்படியும் இருவரும் சேர்ந்து விடுவார்கள். இனி சீரியல் நல்ல இருக்கும் என கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் பலர் பாரதி திருந்த வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர்.

ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் விட்ட பழைய டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்குமா என்பது பார்க்க பார்க்கத்தான் தெரியும்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannamma serial story changing for trp rating

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com