Advertisment

Vijay TV Serial: சர்ப்ரைஸ்... பாரதி- வெண்பா கல்யாணம்?

Bharathi Kannamma Serial: கண்ணம்மா ஹேமாவுடன் லட்சுமி பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிப்பாளா? பாரதி சொன்ன சர்பிரைஸ் பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணமா? என்னதான் நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV, Bharathi Kannamma serial, Bharathi, roshini haripriyan, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி வெண்பா கல்யாணம், bharathi kannamma, bharathi - Venba marriage

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், ஹேமாவுக்கு பிறந்தநாள். ஹேமா பர்த்டே பேபி டிரஸ்ஸில் ஸ்கூலுக்கு போக, பாரதியுடன் செல்ல கிளம்புகிறாள். அதற்கு முன்பு பாட்டிக்கு சாக்லேட் கொடுக்க, “பாட்டி… பாட்டி…” கூப்பிட்டுக்கொண்டு ஹேமா சௌந்தர்யாவிடம் செல்கிறாள்.

Advertisment

“ஹேமா… வாடி வாடி என்னோட பர்த்டே பேபி… தேங்க்ஸ்.” என்று சௌந்தர்யா ஹேமாவை வாழ்த்துகிறாள். அப்போது ஹேமா, “பாட்டி இந்தாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க…”என்று சாக்லேட் கொடுக்கிறாள். சாக்லேட் எடுத்துக்கொண்ட சௌந்தர்யா, “உங்க டாடி உன்னை விஷ் பண்ணலயா?” என்று கேட்கிறாள். அதற்கு ஹேமா, “காலையில் எழுந்தவுடன் முதல் விஷ் பண்ணதே டேடிதான்” என்று கூறுகிறாள்.

இதைக்கேட்ட சௌந்தர்யாஅ, “அப்படியா… இந்த சாக்லேட்ட முதல்ல ஸ்கூல் எடுத்துட்டு போய் உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுக்கணும்… முக்கியமா உங்க சமையல் அம்மாவுக்கு கொடு… அவங்க உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்லைய?” என்று கேட்கிறாள்.

அதற்கு, ஹேமா சந்தோஷத்துடன், “ஆமா பாட்டி அவங்களுக்குதான் கண்டிப்பா நான் தருவேன்” என்று கூறுகிறாள்.

இதையடுத்து, சௌந்தர்யா ஹேமாவிடம், “சரிம்மா நீ கீழே போய் கார்ல வெயிட் பண்ணு… நான் அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறாள். ஹேமாவும் சரி பாட்டி என்று கீழே காருக்கு செல்கிறாள். இப்போது, சௌந்தர்யா, “பாரதி எப்படி இருக்குது உன் கை? வலிக்குதா ?” என்று கேட்கிறாள். கையில் கட்டுப் போட்டிருக்கும் பாரதி, “பரவால்லம்மா பரவால்ல” என்று கூறுகிறான்.

தொடர்ந்து பேசும் சௌந்தர்யா, “எங்க அடிப்பட்டதுனு கேட்டா நீ சொல்ல மாட்ட… ஆனால், நான் சொல்றேன். கண்ணம்மா வீட்டுக்குப்போய் அங்க தான், உனக்கு அடிபட்டிருக்கு கரெக்டா? எப்படி எனக்கு தெரியும்னு பாக்குறியா? உடனே கண்ணம்மா எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பானு ரொம்ப யோசிக்காதப்பா… குட்டி எங்க போயி அடிபட்டு வந்திருக்குமுன்னே அம்மாவுக்கு தெரியும்.” என்று கூறுகிறாள்.

அம்மாவின் பேச்சை கேட்க விருப்பம் இல்லாத பாரதி, “சொல்லுங்க… அங்கதான் அடிபட்டதும்மா… சரி நான் கிளம்புறேன்” என்று கிளம்புகிறான்.

அப்போது சௌந்தர்யா, “கொஞ்ச நேரம் இருந்து என்கிட்ட பேசிட்டு போனால் என்ன? பெத்த அம்மாகிட்ட பேசுறதுல என்ன?” என்று கேட்கிறாள். அதற்கு பாரதி, “சரி சொல்லுங்க” என்று கூறுகிறான்.

சௌந்தர்யா தனது மகன் பாரதியிடம் “என்ன நடந்துச்சு? எதுக்காக நீ அவளைத் தேடிப் போன… அதுக்கு உனக்கு என்னடா அவசியம் வந்துச்சு சொல்லு. பாரதி உங்க கிட்ட வழியில்லைனு ஒதுங்கி இருக்கும் அவகிட்ட போயி என்ன பண்ணி இருக்க? நீ அவள அடிச்சியா? இல்ல அவ உன்ன அடிச்சாளா?” என்று கேட்கிறாள். அதற்கு பாரதி கோபமாக கொந்தளிக்கிறான். இதை கவனித்த சௌந்தர்யா, “அவ உன்னை அடிச்சாளா என்று கேட்டதற்கு ஆம்பள என்கிற திமிரு ஆனால் எட்டிப்பார்க்குதா? அவ அடிச்சாளானு கேட்டப்போ அவ்வளவு கொந்தளிக்கிற? அப்பா அடிக்கல. அப்ப நீ தான் அவ பக்கத்துல இருந்த ஏதோ ஒன்னை அடிச்சு உடைச்சிருக்க?” என்று நடந்ததை நேரில் பார்த்தது போல கேட்கிறாள் சௌந்தர்யா.

பாரதி உடனே, “சரிமா உனக்கு என்னதான் வேணும்?” என்று கேட்கிறான். மேலும் தனது மகனை கேள்வி கேட்கும் சௌந்தர்யா, “நீ எதுக்கு அங்க போன? அந்த கேள்விக்கு எனக்கு இப்ப பதில் வேணும். அதை சொல்லிட்டு போ.” என்று கேட்கிறாள்.

கோபமடையும் பாரதி, “ஏம்மா நான் எதையும் ஒங்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணுமா? நானே சொந்தமாக யோசித்து எதையும் செய்ய கூடாதா? முடிவெடுக்க கூடாதாம்மா?” என்று கேட்கிறாள்.

அப்போது, பாரதிக்கு உடனடி பதிலாக, “கல்யாணம் பண்ணிட்டேன்னு பொய் சொன்னியே அது மாதிரியா? நீ முட்டாள்தனமான செய்வ அதை நான் வேடிக்கை பாத்துட்டு சும்மா இருக்கனுமா? இதோ பாரு பாரதி ஒன்னு பிடிக்கலைன்னா நீ ஒதுங்கி இருக்கணும். எதுக்குடா அவளை தேடிப் போய் தொந்தரவு பண்ணுன? அவ என்னிக்காவது உன் வழிக்கு வந்திருக்காளா சொல்லு பாரதி? அவளைத் தேடிப் போய் அப்படி என்ன கேட்ட? அதான் எனக்கு புரியலடா…. டைவர்ஸ் கேட்டியா… டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட சொல்லி கேட்டியா? இல்லன்னா இந்த ஊரை விட்டுப் போகச்சொல்லி மிரட்டினயா? உன் கையில் ரத்தம் வர்ற அளவுக்கு அப்படி அங்கு என்னதான் நடந்துச்சு?” என்று கேட்கிறாள்.

அப்போது கண்ணம்மா வீட்டில் என்ன நடந்தது என்று பாரதி மனதில் நினைத்துப் பார்க்கிறான். “நீ என்கூட டிஎன்ஏ டெஸ்ட்எடுக்க வர்றியா? அந்த டெஸ்டில் என் பொண்ணுக்கு நீதான் அப்பானு உறுதி ஆயிடுச்சின்னா என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்.” என்று கண்ணம்மா உறுதி சொல்கிறாள். இதனால் கோபடைந்த பாரதி கையில் இருந்த கண்ணாடி கிளாஸ்ஸை அழுத்திப் பிடித்துக்கொண்டு கீழேபோட்டு உடைக்கும்போது கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. இதைப் பார்த்து பதற்றமான கண்ணம்மா தனது சேலையால் பாரதியின் ரத்தத்தை துடைக்கு முன் வருகிறாள். ஆனால், முன்கோபியான பாரதி, அவளை தடுத்துவிடுகிறான். இதை தன் மனதில் நினைத்துப் பார்க்கிறான்.

பாரதியை தொடர்ந்து கேள்வி கேட்கும் சௌந்தர்யா, “ஏன் பாரதி பதில் சொல்ல மாட்டேங்குற.. உன் கோபம் நியாயமா இருந்துச்சுன்னா, ஆமா! இதுக்குதான் போனேன். அவ இதான் பேசினாள்னு சொல்ல வேண்டியது தானே. உனக்காவது கையில அடிபட்டு இருக்கு… அது இன்னைக்கோ நாளைக்கோ ஆரிடும். ஆனால், நீ அங்க போய் அவளை கண்டபடி மோசமாக திட்டிட்டு வந்திருப்ப… அவ மனசு எவ்வளவு காயப்பட்டு இருக்கும்.” என்று சௌந்தர்யா தனது மருமகள் கண்ணம்மாவுக்காக வருத்தப்படுகிறாள் .

இதைக் கேட்டு கோபம் அடையும் பாரதி, “உங்க சொந்த மகன் எனக்கு அடிபட்டு இருக்குகிங்கற கவலையை விட உங்களுக்கு அவ மனசு வருத்தப்பட்டிருக்கும் அப்படின்ற ஒரு எண்ணம். சூப்பர் மா ரொம்ப நன்றி” என்று கூறி கையெழுத்து கும்பிட்டுவிட்டு கிளம்புகிறான். கையெடுத்து கும்பிடும்போது அவன் கை வலியில் துடிப்பதை அறிந்து தாய் பாசத்தில் துடிக்கிறாள் சௌந்தர்யா. ஆனால், பாரதி புறப்பட்டு சென்று விடுகிறான். பாரதி, “மிக்க நன்றிம்மா” என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

அடுத்த காட்சியில் வெண்பா கோபத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். “அந்த துர்கா நான்சென்ஸ்ட் என்னல்லாம் பண்ணிட்டான். என்ன கடத்தி இத்தனை நாளா ஒரே ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வெச்சு, டார்ச்சர் பண்ணி… ஐயோ அவனுக்கு சரியான பாடம் கத்து தரணும். நான் ஒரு டாக்டர் அவன் ஒரு ரவுடி பையன்… என்ன போய் அவன்… சே!” என்று டென்ஷன் ஆகிறாள். பிறகு, வெண்பா அவளாகவே, “கூல் வெண்பா… கூல் வெண்பா… என்னை நானே டென்ஷன் பண்ணிக்க கூடாது. இப்போதைக்கு என் மைண்ட் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தாதான் ரிலாக்ஸ்டா யோசிக்க முடியும். எத்தனை நாள் நம்மள அடைத்து வைத்திருந்தானு வேற தெரியல… இதுக்கு நடுவுல இந்த கதையில என்ன நடந்துச்சு? பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் புதுசா ஏதாவது சண்டை நடந்துச்சா? ஹேமா அவன் பெத்த புள்ளதான்னு அவன் சிசாரிச்சு தெரிஞ்சு வேற தொலஞ்சுச்சா? எதுவுமே தெரியலையே… முதல்ல என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சு தெரிஞ்சிக்கணும்.” என்று கூறுகிறாள்.

அப்போது வேலைக்காரி சாந்தி வீட்டுக்கு உள்ளே வருகிறாள். வெண்பாவைப் பார்த்து, “எப்பம்மா வந்தீங்க” என்று கேட்கிறாள்.

“இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி” என்று வெண்பா பதில் சொல்கிறாள். தொடர்ந்து பேசும் சாந்தி, “எப்படி இருக்கீங்க, எங்க போயிருந்தீங்க.. உங்களை காணம்னு நான் எப்படி தவிச்சி போயிட்டேன் தெரியுமா? உங்க போன் கூட பண்ணமுடியல. உங்க போன் கூட இத்தனை நாளா சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. ஆளையும் காணோம்… நீங்க போன் ஏன் எடுக்கலன்னு சொல்லிட்டு நான் ரொம்பவே பயந்து போயிட்டேன் தெரியுமா? ஒருவேளை இந்த கொரோனாவுல ஒரேஅடியா போய் சேர்ந்துட்டிங்களோ என்று செத்தவங்க லிஸ்ட்ல எல்லாம் உங்க பேரை தேடி பார்த்தேன் தெரியுமா?” என்று கூறுகிறாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் வெண்பா, “அடிப்பாவி நான் போய் சேர்ந்துட்டேன்னு முடிவே பண்ணிட்டியா?” என்று கேட்கிறாள். சாந்தி, “நீங்க வேற என்னம்மா பண்ண சொல்றீங்க, இதை பாருங்க நீங்க உயிரோடு இருக்கணும்னு வேண்டிக்கிட்டு அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வரேன்” என்று வெள்ளந்தியாக பேசுகிறாள். அதற்கு, வெண்பா, “என்னை சாகடிச்சுட்டு நீ அர்ச்சனை வேற பண்ணிட்டு வர்றீயா? ஆள பாரு” என்று கூறுகிறாள்.

சாதி, “நீங்க சாககூடாதுனுதானம்மா வேண்டிட்டு வர்றேன். பாரதி சார்கிட்ட கேட்டால் அவருக்கும் தெரியல… வேற யார் கிட்ட கேட்கிறது? அவருக்கும் தெரியல போலீஸ் கிட்ட சொல்லலாம்னு பார்த்தா, நீங்க யார் கிட்ட என்ன பிரச்சனை பண்ணி வச்சிருக்கிங்கன்னு தெரியல. கம்ப்ளைன்ட் கொடுத்து அது உங்களுக்கு எதிராகவே திரும்பிடுச்சுன்னா, அதனால தான் எதுவும் பண்ணல” என்று கூறுகிறாள்.

வெண்பா, “நல்லவேளை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கல. நல்ல வேலை போலீஸ் ஸ்டேஷன் போகல அதுவரைக்கும் சந்தோஷம் தான்.

சாந்தி, “சரி அதெல்லாம் இருக்கட்டும்மா நீங்க இத்தனை நாளை எங்க இருந்தீங்க” என்று கேட்கிறாள்.

அவளிடம் உண்மையை மறைக்கும் வெண்பா, மும்பைக்கு அவசர வேலையாக போனதாகவும், போன் உடைந்து போனதாகவும், மும்பையில் லாக்டவுன் என்பதால் போனை சரி செய்ய முடியவில்லை என்றும் கூறுகிறாள். அப்போது சாந்தி, “நேத்து மட்டும் நீங்க இங்க இருந்திருந்தா, இந்நேரம் உங்களுக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடந்திருக்கும்” என்று கூறி பாரதி கண்ணம்மாவிடம் போய் சண்டை போட்டதை பற்றி விரிவாக கூறுகிறாள்.

பாரதி போய் கண்ணம்மாவுடன் சண்டை போட்டதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வெண்பா, பாரதிக்கு போன் செய்கிறாள். ஹேமாவை காரில் ஸ்கூலுக்கு அழைத்து செல்லும் பாரதி, வண்டியை ஓரங்கட்டிவிட்டு பேசுகிறான். “என்னாச்சு? இவ்வளவு நாளா எங்க போன?” என்று கேட்கிறான். அதற்கு, அவனிடமும் மும்பை போனதாக சொல்கிறாள். அதன்பிறகு, பாரதி வெண்பாவிடம், “நேர்ல வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று சொல்கிறான். இதைக் கேட்ட சாந்தி, “நீங்க திரும்ப வரும்போது ரெண்டு பேரும் மாலையும், கழுத்துமா வரணும்” என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

இதனிடையே, ஸ்கூலுக்கு ஆட்டோவில் வரும்போது கண்ணம்மா, லட்சுமி, குமார் மூவரும் சந்தோஷமாக பேசி கொண்டு வருகிறார்கள். அப்போது, பாரதி ஒரே இடத்தில் வைத்து உங்க ரெண்டு பேர் பர்த்டேவையும் கிராண்ட்டா கொண்டாடலாம் என்று சொன்னதை லட்சுமி கண்ணம்மாவிடம் சொல்கிறாள். தொடர்ந்து பேசும் லட்சுமி, “நான் போனால், ஹேமா ரொம்ப சந்தோஷப்படுவா, அப்புறம் அங்க இருக்க பாட்டியும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நான் போகட்டும்மா அம்மா” என்று கேட்கிறாள். ஆனால், கண்ணம்மா அமைதியாக லட்சுமியின் முகத்தை பார்க்கிறாள். பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. நாளைய எபிசோடில், கண்ணம்மா ஹேமாவுடன் பிறந்தநாளைக் கொண்டாட லட்சுமிக்கு அனுமதி அளிப்பாளா? பாரதி வெண்பாவிடம் சொன்ன சர்பிரைஸ் என்ன? அந்த சர்பிரைஸ் பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணமா? என்னதான் நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment