பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் எப்போது? ஷாக் கொடுத்த வெண்பா

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது எப்போது முடியும்’ என்றும் நெட்டிசன் ஒருவர் வெண்பாவாக நடித்து வரும் ஃபரினாவிடம் கேட்டிருக்கிறார்.

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல், தமிழ் சீரியல் ரசிகர்களின் நம்பர் மனம் கவர்ந்த சீரியலாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் நடக்கும் ட்விஸ்டுகளால் ரசிகர்கள் ஒரு எபிசோடு கூட தவறாமல் பார்த்து வருகின்றனர்.

சந்தேகத்தின் காரணமாக பாரதியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் கண்ணம்மா. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், எதிர்பாரத திருப்பங்களால் பாரதியின் குடும்பத்துடன் மீண்டும் பழக ஆரம்பிக்கிறார். காட்சிகள் இவ்வாறு அரங்கேற, பாரதியின் வீட்டில் வளர்ந்து வரும் கண்ணம்மாவின் மற்றொரு மகளான ஹேமாவின் பிறந்த நாள் காட்சிகள் எபிசோடில் இடம்பெற்றுள்ளன. பாரதியின் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவுக்கு கண்ணம்மாவுக்கும் அழைப்பு வழங்கப்படுகிறது. பாரதியின் வீட்டில் கேட்டுக்கு வெளியில் நின்றிருக்கும் கண்ணம்மாவை ஹேமா பார்த்துவிட்டு ‘இவங்க தான் சமையல் அம்மா’ என பாரதியிடம் காட்ட, ஒரே பரபரப்பு காட்சிகள் தான் எபிசோடு முழுவதும்.

கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற பாரதியின் முகம், ஆக்ரோஷம் பொங்கியது என்றால் மிகையல்ல. அவர்கள் இருவரும் தற்போது சந்தித்துவிட்டதால் இனி பாரதி கண்ணம்மாவில் பல பரபரப்பு காட்சிகளை அடுத்தடுத்த எபிசோடுகளில் எதிர்ப்பார்க்கலாம்.

எபிசோடு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வர, சமூக வலைதளங்களிலும் பாரதி கண்ணம்மா பல்வேறு விவாதங்களையும் கிளப்பி வருகிறது. ‘பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது எப்போது முடியும்’ என்றும் நெட்டிசன் ஒருவர் வெண்பாவாக நடித்து வரும் ஃபரினாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஃபரினா அதிரடி பதில் அளித்திருப்பதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஃபரினா ‘2051’ ல் தான் பாரதி கண்ணம்மா முடியும் என பதில் கூற, அவர் சொன்ன பதிலை கேட்டு ‘என்னது இன்னும் 30 வருஷமா’ என நெட்டிசன்கள் ஷாக் ஆகி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannamma serial venba climax episode

Next Story
இதுதாம்பா பாசம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை க்யூட்டாக கலாய்க்கும் நிஜ தங்கை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express