பாரதி வீட்டுல வெடிகுண்டு... சிறையில் வெண்பா பகீர் ப்ளான்!

Vijay TV BharathiKannamma new promo venba on fire: சிறைக்குள் இருந்துக்கொண்டே வில்லத்தனம் செய்யும் வெண்பா; பாரதி என்ன செய்யப்போகிறான்? பாரதி கண்ணம்மா ப்ரோமோ

Vijay TV BharathiKannamma new promo venba on fire: சிறைக்குள் இருந்துக்கொண்டே வில்லத்தனம் செய்யும் வெண்பா; பாரதி என்ன செய்யப்போகிறான்? பாரதி கண்ணம்மா ப்ரோமோ

author-image
WebDesk
New Update
பாரதி வீட்டுல வெடிகுண்டு... சிறையில் வெண்பா பகீர் ப்ளான்!

ஜெயிலுக்குள் இருந்துக் கொண்டே வெண்பா, பாரதி குடும்பத்தில் வெடிகுண்டு வீசும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்குள் நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் இந்த சீரியல், நடிகர் மாற்றம் இருந்தாலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சீரியலில் தற்போது வில்லி வெண்பா சிறையில் இருக்கிறாள். இந்தப் பக்கம் பாரதி டைவர்ஸ் கேட்டு விண்ணப்பிக்கிறான். தற்போது பாரதி மற்றும் கண்ணம்மாவின் டைவர்ஸ் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவி புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிறையில் இருக்கும் வெண்பாவிடம் மாயாண்டி போனில் பேசுகிறான். அப்போது, பாரதியின் டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் இன்று விசாரணக்கு வருகிறது என சாந்தி கூறியது வெண்பாவுக்கு நினைவுக்கு வருகிறது.

Advertisment
Advertisements

உடனே மாயாண்டியிடம், எனக்கு உதவி செய்யமா அவன் (பாரதி) மட்டும் ஜாலியா பிரிஞ்சு போவானா, அவன் வீட்டில் ஒரு வெடிகுண்டு வீசுனா தான் அவனுக்கு வலிக்கும் என சொல்ல, மாயாண்டி கோவிலுக்கு வரும் அஞ்சலியை கடத்துகிறான். வெண்பாவின் வில்லத்தனத்தை பார்த்து மிரண்டு போகும் சிறைக்காவலர், டாக்டர் நீ என்ன விட கிரிமினலா இருக்கே, ஜெயிலுக்குள் இருந்துக்கிட்டே பெரிய வேலை பார்க்குற என சொல்கிறார். இதைக்கேட்டு வெண்பா வில்லத்தனமாக லுக் விடுகிறார்.

இதனால் அஞ்சலி காப்பாற்றப்படுவாளா? பாரதி மற்றும் கண்ணம்மாவின் டைவர்ஸ் கேஸ் என்ன ஆகும் எனத் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: