/tamil-ie/media/media_files/uploads/2021/11/barathikannamma-13-promo.jpg)
எனக்கும் சுயமரியாதை முக்கியம் என சொல்லி, கோர்ட்டில் சந்திப்போம் என பாரதி சொல்லும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் பாரதி டைவர்ஸ் முடிவை எடுக்க, டைவர்ஸ் வாங்கினால் ஹேமாவை பாரதியிடம் இருந்து பிரிக்கும் முடிவில் கண்ணம்மா இருக்கிறாள். இந்த நிலையில் விஜய் டிவி புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஹேமாவின் ஸ்கூலில் கண்ணம்மாவைச் சந்திக்கும் பாரதி, உன்னை விட்டு நிரந்தரமாக பிரிய தான் இந்த முடிவை எடுத்துருக்கேன். கவலைப்படாதே, உனக்கு ஒரு பெரிய தொகை ஜீவனாம்சமா கிடைக்கும் என சொல்கிறான்.
அதற்கு கண்ணம்மா பணத்தை விட, வசதியை விட என ஆரம்பிக்க, உடனே இடைமறிக்கும் பாரதி, சுயமரியாதை அதானே, அடி சுயமரியாதை சிங்கம், உனக்கு எப்படி சுயமரியாதை முக்கியமோ, அப்படி எனக்கும் சுயமரியாதை முக்கியம், நாம ரெண்டு பேரும் சட்டப்படி பிரியுறது தான், நம்ம சுயமரியாதையை காப்பாற்றிக்க ஒரே வழி, கோர்ட்டில் சந்திப்போம் என சொல்லிவிட்டு செல்கிறான். இதைக்கேட்டு திகைத்தவாறு நிற்கிறாள் கண்ணம்மா.
ஏற்கனவே கண்ணம்மா, டைவர்ஸ் வாங்கினால் பாரதியிடம் இருந்து ஹேமாவை பிரித்து விடுவேன் என சொல்லியுள்ள நிலையில், பாரதி டைவர்ஸ் வாங்குவதில் உறுதியாக இருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.