scorecardresearch

பிக் பாஸ் சினேகனுக்கு கல்யாணம்: பொண்ணு யாரு?!

Big boss fame snehan getting marriage soon Tamil News: பிக் பாஸ் சினேகனுக்கு விரைவில் திருமணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உறவுக்கார பெண்ணை மணம் முடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது

Vijay tv Big boss Tamil News: Big boss fame snehan getting marriage soon

Vijay tv Big boss Tamil News: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக வலம் வருபவர் பாடலாசிரியர் சினேகன். இவர் இதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் உதவியாளராக திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், தனது கை வண்ணத்தால் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து பல படங்களுக்கு எழுதியும் வருகிறார்.

பாடலாசிரியராக பல ஹிட் பாடல்களை எழுதி ஏற்கனவே பாப்புலராக இருந்த சினேகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார். அதன் முதல் சீசனில் போட்டியாளராக களம் கண்ட இவர் கடைசிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து இரண்டாமிடம் பிடித்தார். இருப்பினும், ஆரவ்வுக்கு பதில் இவருக்கு முதலிடம் வழங்கப்பட்டு இருக்கலாம் என இவரது ரசிகர்கள் அந்த நேரத்தில் கொந்தளித்து பேசி வந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அந்த கட்சியில் பணியாற்றி வந்த இவர், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பாடல்கள் எழுதுவதன் மூலமும், ஏழை எளியோர்க்கு சேவை செய்வதன் மூலமும் தன்னை பிசியாக வைத்திருக்கும் சினேகனுக்கு தற்போது திருமணம் ஆகவுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவரது உறவுக்காரப் பெண் ஒருவரைத்தான் மணம் முடிக்க போகிறார் சினேகன் என்றும் கூறப்படுகிறது. இந்த திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் தான் முன்னின்று நடத்தி வைக்கவுள்ளதாகவும், திருமண குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரலாம் எனவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv big boss tamil news big boss fame snehan getting marriage soon