கவின்- லாஸ்லியாவை எதிர்கொள்ளும் சேரன்.. அதிரடி பதிலால் அரங்கத்தை அதிர வைக்கும் வனிதா! இது பிக் பாஸ் கொண்டாட்டம்

இந்த கொண்டாட்டதிலும் மதுமிதா, சரவணன் மிஸ்ஸிங்

vijay tv bigg boss celebration : பிக் பாஸ் சீசன் 3 முடிந்து விட்டதே, இனி கவினை எப்படி பார்ப்பது? லாஸ்லியாவை எப்படி திட்டுவது? சாண்டி பேச்சை கேட்ட முடியாதா ?என்றெல்லாம் புலம்பி தள்ளிய பிக் பாஸ் வெறியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ். பிக் பாஸ் கொண்டாட்டம் விஜய் டிவியில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

வழக்கம் போல் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் இந்த கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நீயா? நானா? கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். வனிதாவின் அதிரடி பதில்கள், கவினின் நடனம், போட்டியாளர்களை கலாய்த்து வழக்கம் போல் சாண்டின் ஸ்பெஷல் ஃபர்ஃபாமன்ஸ்.இதில் ஹலைட் என்னவென்றால் மீண்டும் கவினையும் லாஸ்லியாவை சேரன் அப்பா சந்திக்கிறார்.

சமீபத்தில் அவர்கள் குறித்து பேச வேண்டாம் என்று காட்டமாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு வைரலாகி இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இந்த கொண்டாட்டதிலும் மதுமிதா, சரவணன் மிஸ்ஸிங்.மேலும், மீரா மிதுன், ரேஷ்மா ஆகியோர் கூட பங்குபெறவில்லை.

பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த காட்சியும் இந்த கொண்டாட்டத்தில் இருக்கிறது.என்ன தெரியுமா? கவினும் – லாஸ்லியாவும் இணைந்து நடனம் ஆடி இருக்கிறார்கள். இதற்கான ப்ரோம்மக்களை விஜய் தொலைக்காட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. வரும் ஞாயிறன்று ஒளிப்பரப்பாகவுள்ள பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலூங்கியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close