New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/vanitha-vijayakumar.jpg)
Vijay TV Serial Actress Vanitha Vijayakumar: வனிதா வீட்டில் சந்தோஷம்: அவரே வெளியிட்ட புதிய அப்டேட்
வனிதா விஜயகுமார் தனது இரண்டாவது மகள் பூப்பெய்தல் நிகழ்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
"என் சிறிய தேவதை ஒரு பெண்ணாக மாறிவிட்டாள் . மகள் என்பவள் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் விலைமதிப்பற்ற ஒன்று" என வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
பூப்பெய்தல் நிகழ்வு ஒவ்வொரு சமூகத்தினராலும் ஒவ்வொரு விதமாக வரவேற்கப்படுகிறது. வனிதா விஜயகுமார் பூப்பெய்தல் நிகழ்வை பெண்ணிய கண்ணோட்டமாக #Women Empowerment என்ற ஹேஷ்டேக்- ஐ பயன்படுத்தியுள்ளார்.
வனிதாவின் சந்தோஷம், துக்கம் என அனைத்திலும் அவரது ரசிகர்கள் பங்கெடுத்து கொண்டுவருகின்றனர். தற்போதும் , அவரின் ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் வனிதாவின் இரண்டாம் மகளுக்கு தங்களது நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
Iniya thamizhar thirunaal nalvaazhthukkal and sankranti subhakankshalu...#mahakali #Kolkata #Pongal2021 #Pongal pic.twitter.com/sk1dpfWas8
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 13, 2021
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வனிதா அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றதன் மூலம் புகழ் பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.