Advertisment

சன் டி.வி சீரியலில் பிக் பாஸ் நடிகை: இவருக்கு ஜோடி அந்த நடிகரா?

சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் நடிகை; ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Gabriella Cherlton

சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் நடிகை; ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார் பிக் பாஸ் கேப்ரியல்லா.

Advertisment

விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. அதற்கு நடன நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் கேப்ரியல்லா நடித்துள்ளார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர், அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' இரண்டாவது சீசனில் நடித்தார். அந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சன் டிவியில் நாயகியாக நடிக்க வந்திருக்கிறார் கேப்ரியல்லா. இந்த சீரியலைத் 'வானத்தைப் போல' தொடரைத் தயாரித்து வருகிற நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் புதிய சீரியலுக்கு இன்னும் டைட்டில் வைக்கப் படாத நிலையில், தொடரின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்தச் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் கேப்ரில்லாவுக்கு ஜோடியாக 'நந்தினி', 'கண்ணே கலைமானே' முதலான சீரியல்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன் மனைவி புகார் கொடுத்ததன் பேரில் கைது செய்ய போலீசார் தேட, தலைமறைவாகி, பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்று முன் ஜாமின் வாங்கியவர் தான் இந்த ராகுல் ரவி. நேற்று நடந்த பூஜையில் ராகுல் ரவி, கேப்ரில்லாவுடன் சீரியலில் நடிக்கும் மேலும் சில ஆர்ட்டிஸ்ட்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Sun Tv Gabriella Charlton
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment