scorecardresearch

வனிதா போன பிறகும் ராஜமாதா ரொம்ப கறார்தான்… மறு வாய்ப்புக்கு கெஞ்சிய போட்டியாளர்கள்!

Vijay TV Bigg boss jodigal Ramya krishnan strict to contestants: ரமேஷூக்கு மறுவாய்ப்பு கேட்ட சக போட்டியாளர்கள்; இது தான் கடைசி கண்டிப்புடன் கூறிய ரம்யா கிருஷ்ணன்

வனிதா போன பிறகும் ராஜமாதா ரொம்ப கறார்தான்… மறு வாய்ப்புக்கு கெஞ்சிய போட்டியாளர்கள்!

ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி தற்போது, புது விதமான நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறது. அது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியாகும். விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைக் கொண்டு இந்த நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. அனைத்து சீசன்களிலும் கலந்துக் கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துக் கொள்வதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக, நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணனும் நடிகர் நகுலும் உள்ளனர். சில வாரங்களாக, செலிப்ரேஷனாக போய் கொண்டிருந்த நிகழ்ச்சி, தற்போது சீரியஸாக மாறி வருகிறது. போட்டியாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை வனிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரம்யா கிருஷ்ணன் குறைவாக மதிப்பெண் வழங்கியதால் தான் வனிதா வெளியேறினார் என்று கூறப்பட்டது. இது குறித்து, ரம்யா கிருஷ்ணன் கருத்து ஏதும் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது, இந்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில், இந்த வாரம் நிகழ்ச்சியில் ரொமான்ஸ் சுற்று நடந்து வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ், அரசர் கெட்டப்பில் டான்ஸ் ஆடினார். அதில் ஒரு கட்டத்தில் ரமேஷ் டான்ஸ் ஆடாமல் நின்று விட்டார். என்ன ஆச்சு என நடுவர் ரம்யா கிருஷ்ணன் கேட்டபோது, வாள் கனமாக இருப்பதாகவும், வழுக்குவதாகவும் ரமேஷ் கூறினார். ஆனால் இது போட்டி என மறு வாய்ப்பு தர மறுத்தார் ரம்யா கிருஷ்ணன். நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள், ரமேஷூக்கு மறுவாய்ப்பு தர கெஞ்சவே, ரம்யா கிருஷ்ணன் ஒத்துக் கொண்டார். ஆனால், இனிமேல் இதுபோல் மறுவாய்ப்பு தரப்படாது என கண்டிப்புடன் கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bigg boss jodigal ramya krishnan strict to contestants

Best of Express