அபிநயுடன் தனியா பேசினா இவங்களுக்கு என்ன? கொந்தளித்த பாவனி

Vijay TV Bigg boss new promo Pavani fight with Cibi: அபிநய் உடன் பேசுவது என் இஷ்டம்; சிபியிடம் சண்டையிடும் பாவனி; பிக் பாஸ் ப்ரோமோ

அபிநய் கூட நான் எப்ப வேணா பேசுவேன் உங்களுக்கு என்ன? என ராஜூ மற்றும் சிபியிடம் பாவனி கோபப்படுவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதுப் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிந்து மூன்று கட்சிகளாக உள்ளனர். இந்த கட்சிகளுக்கு சஞ்சீவ், சிபி, பிரியங்கா ஆகியோர் தலைவர்களாக உள்ளனர்.  

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் மாநாட்டில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுவதாக இன்றைய எபிஷோடுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியானது.

தற்போது இன்றைய எபிஷோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் தனக்கும் அபினய்க்கும் உள்ள உறவு குறித்து நேற்றைய எபிசோடில் சிபி பேசியது மற்றும் இன்று கார்டன் ஏரியாவில் நடந்த அரசியல் மாநாட்டில் பாவனி – அபினய் உறவு குறித்து பிரியங்கா மற்றும் ராஜு பேசியது ஆகியவை தொடர்பாக பாவனி கோபப்பட்டு பேசுவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோவில், அபிநய்யை குறிப்பிட்டு பாவனி, நான் அவன் கூட பேசுவேன், தனியா உட்கார்ந்து பேசுவேன், இவங்களுக்கு என்ன? நான் அவன் கூட எந்த டைம்ல கூட உட்கார்ந்து பேசுவேன், அது என் இஷ்டம், அவன் இஷ்டம், என கோபமாக கத்துகிறார்.

இந்த கேள்வி ஏன் வந்தது, இப்ப கேள்வி என்னனா என ராஜூ இடைமறிக்க முயற்சிக்க, இதப்பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் கொடுக்கல, நீ ஏன் பேசுற, நீ யாரு? நீ யாரு?, என கேட்க ராஜூ எதுவும் சொல்லமுடியாமல் அமைதியாகிறார்.

அடுத்து, நீ தானே லவ் இல்லனு சொல்ற, ப்ரெண்ட்ஷிப் இல்லனு சொல்ற, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோனுதோ அதைதான் நான் பேச முடியும் என சொல்கிறார் சிபி. உடனே கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாவனி, அது என்னுடைய பர்சனல் விஷயம் என கத்துகிறார்.

அதற்கு சிபி, நான் பேசுவது என்னுடைய பர்சனல் நானும் பேசுவேன் என்கிறார். இதனைக்கேட்ட பாவனி உன்னுடைய பர்சனலா என கேட்டு ஆவேசமாகிறார். இப்படியாக இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bigg boss new promo pavani fight with cibi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express