இந்த டிக்- டாக் புயலும் வர்றாங்களாம்: நீளும் பிக் பாஸ்- 4 பட்டியல்
விஜய் டிவியில் அடுத்து வரவுள்ள பிக்பாஸ் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்டாக் கியூட் புயல் இலக்கியா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய் டிவியில் அடுத்து வரவுள்ள பிக்பாஸ் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்டாக் கியூட் புயல் இலக்கியா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
vijay tv, bigg boss, bigg boss season 4, tiktok fame Ilakkiya, விஜய் டிவி, பிக்பாஸ், பிக்பாஸ் சீசன் 4, டிக்டாக் பிரபலம் இலக்கியா, பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள், vijay tv bigg boss season 4, bigg boss season 4 contestant, bigg boss season 4 contestant, ilakkiya, latest bigg boss news ilakkiya tiktok
விஜய் டிவியில் அடுத்து வரவுள்ள பிக்பாஸ் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்டாக் புயல் இலக்கியா போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
Advertisment
Advertisements
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி என்பது பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த சிலரை ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வைத்து அவர்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து தொகுத்து ஒளிபரப்புவதுதான்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகச்சியின் 4 சீசன் தொடங்குவதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்துவருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், விஜே மணிமேகலை, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளராக டிக்டாக்கில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலைக்கிய பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலக்கியா சினிமா நடிகைகளைப் போல கவர்ச்சியான சினிமா பாடல்களுக்கு டிக்டாக் செய்து சர்ச்சைகளுக்குள்ளானவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சிலர் பண மோசடி செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலக்கியா பங்கேற்கப்போவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா கியூட் புயல் இலக்கியா என்று நெட்டிசன்கள் வியப்பு தெவித்துவருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"