Bigg Boss Vanitha Vijayakumar: கடந்த 2017-ம் ஆண்டு முதல் தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் சீசனில் ஓவியா, காயத்ரி, சினேகன், ஆரவ் உள்ளிட்டோர் மக்களிடம் வரவேற்பைப் பெற்றனர். அடுத்த சீசனில் யாஷிகா ஆனந்த், மஹத், ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கடந்த வருடம் லாஸ்லியா, கவின், சாண்டி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சில படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், குடும்ப பிரச்னைகளால் ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் இன்னும் பாப்புலரானார்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முகத்துக்கு நேராக பேசினார் வனிதா. இதனால் பிக் பாஸ் வீடு தினமொரு புது சண்டையுடன் களை கட்டியது. தவிர விஜய் டிவி-யின் டி.ஆர்.பி ரேட்டும் எகிறியது. போன சீசன் முழுவதுமே கண்டெண்ட் கொடுத்தது வனிதா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Advertisment
Advertisements
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4 அல்லது 11 ஆம் தேதி முதல் பிக் பாஸ் 4 ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் 2 ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதோடு, 14 பேர் கொண்ட பட்டியல் ஒன்று ரெடியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்படவில்லை. தவிர பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை தேர்வு செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் போட்டி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சிடில்,'காளி', 'இஸ்பேட் ராஜாவாவும் இதய ராணியும்' நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ்,ஷிவாங்கி, நடிகை அதுல்யா ரவி, நடிகை கிரண், நடிகர் கரண், அமுதவாணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிக் பாஸில் வனிதா விஜயகுமார்
தவிர இந்த வருடம் பிக் பாஸில் வனிதாவின் இடத்தை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. அதில் நடிகைகள் சஞ்சனா சிங், கிரண், ஷாலு ஷம்மு, பூனம் பாஜ்வா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
சஞ்சனா சிங்
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பல மணிநேரம் உடல்பயிற்சி செய்வதற்கு நடிகைகள் சலிப்பே அடைவதில்லை. அந்த வரிசையில் நடிகை சஞ்சனா சிங்கும் அடங்குவார். ஊரடங்கு சமயத்தில் கூட பல விதமான உடற்பயிற்சி செய்து அதனை தனது ரசிகர்களுக்காக தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு கொண்டு இருந்தார். கோ உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ள இவர், கவர்ச்சியான படங்களால் இணையத்தில் பேசுபொருளாக வலம் வருபவர். அவர் பிக் பாஸில் கல்ந்துக் கொண்டால், சரியான எண்டெர்டெயின்மெண்டாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
கிரண்
ஜெமினி, வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை கிரண். பார்ப்பதற்கு பப்ளியான லுக்கில் இருக்கும், அவருக்கு ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. சமீப காலமாக கவர்ச்சியான பல ஃபோட்டோஷூட்களை நடத்தி, அந்த பசங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தவிர இவரது டிக் டாக் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம்.
பூனம் பாஜ்வா
இவரும் ஒரு கொழுக் மொழுக் நடிகை தான். கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்பு வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸில் கலந்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு, சால்ஸா டான்ஸால் இணையத்தில் பிரபலமானவர். கவர்ச்சி புயலில் குதிக்க இவரும் மறக்கவில்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே அதற்கு சாட்சி.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூன்றவது திருமணம் செய்துக் கொண்டார் வனிதா. பீட்டர் பால் என்பவரை மணந்ததும், அவரது முதல் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்த திருமணத்துக்கு எதிராக பொதுமக்களும், பிரபலங்களும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் சமூக வலைதளங்களில் சண்டை மூண்டது. ஒருவர் மீது மற்றொருவர் போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு இந்த விஷயம் பரபரப்பானது.