Bigg Boss Tamil 4: விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தினமொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களை இரண்டாக பிரித்து பாதி பேர் அசுரர்களை போலவும் மீதி பேர் ராஜ குடும்பத்தை போலவும் உடை அணிந்திருக்கும் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் ரியோவுக்கு வடிவேலுவின் புலிகேசி கெட்டப் வழங்கப்பட்டு உள்ளது. அசுரர்கள் என்ன தொல்லை கொடுத்தாலும் அதற்கு மற்றவர்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். புலிகேசி கெட்டப் போடவேண்டும் என்பதால் ரியோ தன் மீசையை எடுத்துவிட்டு வித்யாசமாக மாறி இருக்கிறார்.
சொர்க்கபுரி ராஜ குடும்பத்திற்கும், மாயபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே நாடாகும் கடும் போட்டி நடக்கிறது. ராஜ குடும்பத்தினர் சிலையாக அமர்ந்து அரக்கர்கள் எது செய்தாலும் சிலையாக இருக்க வேண்டும்.
இந்த டாஸ்க் நடக்கும்போது பாலாஜி முருகதாஸ் மற்றும் வேறொரு போட்டியாளர் உடன் அடிதடியில் இறங்கி இருக்கிறார். அதன் பின் பேசும்போது 'ஆஜித் தான் என்னை முதலில் தொட்டார் என பாலாஜி விளக்கம் கொடுக்கிறார்'. சுரேஷ் சக்ரவர்த்தியும் அவருடன் இதற்காக வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. கையை எடுங்கள் என பாலாஜி முருகதாஸ் சுரேஷிடமும் கோபமாக பேசி இருக்கிறார்.
மூன்றாவது ப்ரோமோவில், “ரியோவுக்கு நான் எது சொன்னாலும் தவறாக தான் இருக்கும். அதனால் நான் போய் நின்றேன். என்னை பார்த்தாலே அவருக்கு கோபம் வரும் என தெரியும்" என்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. அதோடு ரியோவைப் பார்த்து அவர் "நீ பிக் பாஸ்ல ஜெயிச்சிட்டு வெளியில வந்தேன்னா வாசல்ல கட்டாயம் ஒரு வேலை இருக்கு" எனவும் கூறியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”