Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்போதும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோவையும் சொல்லலாம்.
சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் பேசும் விஷயங்கள் ஏதாவது பிரச்னையை தினம்தோறும் உண்டாக்கி வருகிறது. ஆரம்பத்திலேயே அவருக்கும் அனிதாவுக்கும் பிரச்னை எழுந்தது. அதிலிருந்து இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் டாஸ்கின் படி, அனிதாவும் சுரேஷ் சக்ரவர்த்தியும், சின்ன மச்சான் என்ற பாடலுக்கு, கலக்கலான நடனம் ஆடியுள்ளார்கள். இதனைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள், அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இரண்டாவது ப்ரோமோவில், "இந்த வீட்டுக்குள்ள குரூபிஸம் இருக்குன்னு அடிச்சு சொன்னீங்க” என சுரேஷிடம் ரியோ கேட்க, “ஆமா இருக்கு. பட் நான் பேர் சொல்ல விரும்பல” என்கிறார் சுரேஷ். ”பச்சையா தெரியுது அது என்னைய தான் சொல்றீங்கன்னு” என்கிறார் ரியோ. “தம்பி தம்பி ஒரு நிமிஷம்.. வார்த்தைய விடாதீங்க. நிஷா மேடமும் நீங்களும் வெளில இருந்தே ஃப்ரெண்ட். அதனால எல்லாத்துக்கும் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. நீங்க பண்ணது எதுவுமே என்ன வீக் பண்ணல” என்கிறார். ஆக இன்றைய பஞ்சாயத்து ரியோவுக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் தான் போல.
அடுத்து வெளியாகியிருக்கும் 3-வது ப்ரோமோவில், இதில் போட்டியாளர்களுக்கான இன்றைய டாஸ்க் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் குழுவாக இணைந்து, இதனை செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள், அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”