New Update
/indian-express-tamil/media/media_files/snGv0taC2C8fwU5qsuBb.jpg)
பிக் பாஸ் ப்ரோமோ; வாழ்க்கையில் நடந்த பூகம்பத்தை விவரிக்கும் போட்டியாளர்கள்; கதறி அழுத விசித்ரா; மனைவி பிரிந்த வலியை பகிர்ந்த தினேஷ்
பிக் பாஸ் ப்ரோமோ; வாழ்க்கையில் நடந்த பூகம்பத்தை விவரிக்கும் போட்டியாளர்கள்; கதறி அழுத விசித்ரா; மனைவி பிரிந்த வலியை பகிர்ந்த தினேஷ்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்வுகளைக் குறித்து பகிரும் வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் வெற்றி பெறும் நோக்கி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. மேலும், கடந்த பிக் பாஸ்களை விட இந்த சீசனில் சுவாரஸ்யமான டாஸ்க்குகளும் வழங்கப்படுவதால், ரசிகர் ஆர்வமாக நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம், பழைய போட்டியாளர்கள் சிலரை, வீட்டுக்குள் நுழைய வைக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. பிரதீப்பின் வருகைக்காக கூட, இந்த டாஸ்க் வைக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவிலேயே, போட்டியாளர்கள் டாஸ்க்கை செய்து முடிக்க முடியாமல், திணறியதை பார்க்க முடிந்தது.
இதை தொடர்ந்து சற்று முன் வெளியான ப்ரோமோவில், உங்கள் வாழ்க்கையின் பூகம்பம் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பூகம்பத்தை கூறுகிறார்கள். போட்டியாளர்கள் தங்களை தடுமாறச் செய்த ஒரு விஷயத்தை அனைவரின் முன்னிலையிலும் கூற வேண்டும் என டாஸ்க்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் விசித்ரா பேசி முடித்ததும், அவரை போட்டியாளர்கள் அனைவரும் கட்டி பிடித்து ஆறுதல் கூறுகிறார்கள். மாயா கூறுகையில், என் வாழ்க்கையில் நிறைய பூகம்பங்கள் நடந்துள்ளது. நான் ஒரு ADHD குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தை. ஆனால் அதை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என கூறுகிறார்.
ஜோவிகா அம்மம்மாவின் இறப்பு தான் அதிகம் உலுக்கியதாக தெரிவிக்கிறார். தினேஷ் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் தனக்கும் இடையிலான பிரிவினால் ஏற்பட்டுள்ள வலியைப் பற்றி பேசுகிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.