இந்த ஜோடி நம்ம லிஸ்ட்ல இல்லையே... பிக் பாஸ் டீமுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ராஜமாதா!

BB jodigal : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

BB jodigal : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Bigg Boss jodigal

பொதுவாகவே சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் தான். அதுவும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலேயே ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகி வெற்றி பெற்றது பிக்பாஸ் தான். பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து 4 சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஷோ ஹிட்டானதை விட அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்ல ரீச் கிடைத்தது. முதல் சீசனில் ஓவியா முதல் கடந்த கவின், ஆரி என அவரவர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்துள்ளது. இதில் கலந்துகொண்ட பின் பலருக்கு படவாய்ப்புகள் வந்து நடித்து வருகின்றனர்.

Advertisment

பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற பெயரில் புதிய ஷோவ ஒன்றை துவங்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்யவிருக்கும் கலாட்டாவும் அட்ராசிட்டிகளும்தான் இந்த நிகழ்ச்சி.

சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் சோம் - ஷிவானி, ஆஜித் - கேபி, வனிதா - சம்யுக்தா - ஷாரிக், தாடி பாலாஜி - நிஷா ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்பது போல் இருந்தது. மேலும் சென்ராயன், மோகன் வைத்யா உள்ளிட்டவர்களும் அந்த ப்ரொமோவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு யார் நடுவர்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. ஜீவா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது பெயர்களும் சொல்லப்பட்டன. இந்த நிலையில் தற்போது விஜய் டிவி வெளியிட்ட ரீசன்ட் ப்ரோமோவில் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக கலந்துகொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. மாகாபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வரும் ஞாயிறன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. மேலும் அந்த வீடியோவில் முகின், பாலா, ஆரவ், லாஸ்லியா, பாலா, ஆரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Advertisment
Advertisements

மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவே கலக்கல் fun ஆக உள்ளது. பாகுபலி ராஜமாத டைலாக்குடன் தொடங்கும் ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ஷோ பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bigg Boss Jodigal Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: