பிக் பாஸ் நாமினேஷனில் தப்பித்த பாவனி; ரசிகர்கள் மகிழ்ச்சி

Vijay TV Biggboss Pavani reddy escapes from nomination: பிக் பாஸ் நாமினேஷனில் தப்பித்த பாவனி; யாரும் குறை சொல்லவில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் ப்ராசஸூக்கான நாமினேஷனில், போட்டியாளர்கள் யாரும் பாவனி பெயரை குறிப்பிடாதது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரம் ஒருவருக்கொருவர் அறிமுகம் என சுமுகமாக சென்ற நிலையில், இரண்டாவது வாரத்தின் முதல் நாளே போட்டியாளர்களிடையே மோதல் வந்து விட்டது. நேற்று வீட்டின் இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது.

இந்த டாஸ்கில் வருண், அபினய், சிபி ஆகியோர் இமான் அண்ணாச்சியிடம் நடந்து கொண்ட விதம், வாக்குவாதம் செய்தது போன்றவை போட்டியாளர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று தாமரை, இந்த வார வீட்டின் தலைவராக தேர்வானார். ஆனால் தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில், தாமரை பேசியதை ஈகோ பிரச்சனையாக்கிய சின்ன பொண்ணு, தனது பலூனை தானே உடைத்துக் கொண்டு வெளியேறினார்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோசஸ் நடைபெற்றது. இதில் அதிகமானவர்கள் இசைவாணியை நாமினேட் செய்தார்கள். அவரை நாமினேட் செய்தவர்கள் இசைவாணி நடந்து கொள்ளும் விதம் போலியாக உள்ளது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இன்னொரு பக்கம் பிரியங்கா, நிரூப், ராஜு போன்றவர்கள் டஃப்பான போட்டியாளர்கள் என்பதால் சிலரால் நாமினேட் செய்யப்பட்டனர்.

தலைவர் என்பதால் தாமரையை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவரை யாரும் கூறவில்லை. இருந்தாலும் சிலர் தங்களின் நாமினேஷன் தேர்வு தாமரையாக இருப்பதாகவும், அவரை நாமினேட் செய்ய முடியாது என்பதால் வேறு ஒருவரை சொல்வதாகவும் என வெளிப்படையாக கூறினர்.

இதுபோல் மற்றவர்களிடம் உள்ள குறைகள், கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயர்களை நாமினேட் செய்தனர்.

ஆனால் யாரும் பாவனி ரெட்டியின் பெயரை மறந்தும் சொல்லவில்லை. நாமினேஷன் ப்ரோசஸில் பாவனியை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனையடுத்து பாவனியை பாராட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv biggboss pavani reddy escapes from nomination

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com