scorecardresearch

மாலையும் கழுத்துமாக டி.ஜே பிளாக்: திடீர் கல்யாணம்?

ஹே என் தம்பி டி.ஜே.பிளாக்குக்கு கல்யாணம் என்று கத்துகிறார் பிரியங்கா

DJ Black
டி.ஜே.பிளாக்

விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் ரியாலிட்டி ஷோவில் அடுத்த வாரம் டி.ஜே.பிளாக்குக்கு கல்யாணம் நடக்க போவதாக வெளியாகியுள்ள ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப்போடும் திறன் உள்ள விஷய் டிவியில், சூப்பர் சிங்க, ஸ்டார்ஸ் மியூசிங், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் புதுப்புது திறமையாளர்களை கண்டறியவும் உதவுகிறது.

இந்த ஷோக்கள் மட்டுமல்லாமல் இந்த ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் விஜேக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்காவுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் சமீபகாலமாக அதிகமாக பேசப்படும் நபராக மாறியுள்ளவர் டி.ஜே.பிளாக். போட்டியாளர்கள் வரும்போதும், அவர்கள் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் தனியாக மியூசிக் காமெடி டைலாக் மூலம் கவுண்டர் கொடுத்து பிரபலமான இவர், தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் டி.ஜே.பிளாக்குக்கு கல்யாணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவில் மணக்கோலத்தில் டி.ஜே.பிளாக் அமர்ந்திருக்க, ஹே என் தம்பி டி.ஜே.பிளாக்குக்கு கல்யாணம் என்று கத்தும் பிரியங்கா அந்த மாதிரி சொல்லுவேனு நினைச்சிங்களாக என்று கேட்க பிளாக் அதிர்ச்சியில் பார்க்கிறார்.

அதன்பிறகு பேசும் பிரியங்கா ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4-ல் இந்த வாரம் ஒரு கல்யாணம் இருக்கும். அது யாரோட கல்யாணம் எந்த டீமோட செலிபிரேஷன் எல்லமே தெரிஞ்சிக்கோங்க என்று கூறியுள்ளார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bj black wedding celebration on start music promo

Best of Express