விஜய் தொலைக்காட்சி திருச்சி, மதுரை, திருநெல்வேலி என 7 நகரங்களில் மக்களுடன் இணைந்து நடத்தும் நவராத்திரி விழாவில், விஜய் டிவி பிரபலங்கள் ஊர் ஊராக வந்து பங்கேற்கிறார்கள் ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் கண்டு மகிழலாம்.
துர்காதேவியை வழிபடும் நவராத்திரி விழா இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் நோன்பு இருந்து அம்பிகையை வழிபடும் மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். மக்கள் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என 7 நகரங்களில் மக்களுடன் இணைந்து நடத்துகிறது. இந்த நவராத்திரி விழாவில், விஜய் டிவி பிரபலங்கள் ஊர் ஊராக வந்து பங்கேற்கிறார்கள். மக்கள் மிஸ் பண்ணாமல் கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடலாம்.
விஜய் டிவி தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு நகரங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி விழாவில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திருவிளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள, திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி விழாவில் கலந்துகொளும் மக்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை விழாவைக் கொண்டாடலாம்.
விஜய் டிவியின் நவராத்திரி விழா காஞ்சிபுரத்தில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து நவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர்.
அக்டோபர் 16-ம் தேதி சென்னையிலும், அக்டோபர் 17-ம் தேதி ஈரோட்டிலும், அக்டோபர் 18-ம் தேதி திருச்சியிலும் அக்டோபர் 10-ம் தேதி திருநெல்வேலியிலும், அக்டோபர் 21-ம் தேதி தஞ்சாவூரிலும், அக்டோபர் 22-ம் தேதி மதுரையிலும் விஜய் டிவியின் நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இந்த நவராத்திரி விழாவில் அந்தந்த நகர மக்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் கலந்துகொண்டு கொண்டாடலாம்.
இது மட்டுமில்லாமல், விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision-க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி விழாவில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் பங்கேற்று மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள், மிஸ் பண்ணாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“