சின்னத்திரை நட்சத்திரங்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் தங்களை ஆக்டீவாக வைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் அவருக்ளுக்காக ரசிகர்கள் எண்ணிக்கையும் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக விஜய் டிவி நட்சத்திரங்களே அதிகம் பேசப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளியினியாக அறிமுகமாகி பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்தவர் ஜாக்குலின். தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திறமை இருந்தால் போதும் எதையும் திரையில் ஜொலிக்காலாம் நிறம் அவசியமல்ல என்று நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து தேன்மொழி பி.ஏ.பி.எல் மூலம் சீரியலில் அறிமுகமான இவர், இந்த சீரியல் முடிந்துவிட்டதால், தற்போது அடுத்த வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். இதனிடையே இடையில் இவர் உடல் எடை கூடிவிட்டதாக பலரும் பேசிவந்த நிலையில், அந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட இவர், சமீபத்தில் உடல் எடை குறைந்து ஸலிம்மாக கட்சியளித்து அகைவரையும் வியக்க வைத்தார். தற்போது வரை உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வம காட்டி வரும் ஜாக்குலின், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது இவர் வெளியிடும் பதிவுகள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தனது ஜிம்மில் இருந்து ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என்ன ரொம்ப கொடும படுத்துறாங்க... என்னால சுத்தமா முடியல... மூச்சு வாங்குது வாந்தி எடுக்கிறேனு சொன்னாலும் போய் எடுத்திட்டு வானு சொல்றாங்க என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”