Pavani Reddy : தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி, தமிழில் புகழ் பெற்றவர் ’சின்னத்தம்பி’ சீரியல் நாயகி பவானி ரெட்டி. தற்போது சீரியல்கள் எதுவும் கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வைரலாகி வருகிறார்.
சீனியர் சிட்டிசன்கள் வீட்டில் இருந்தப்படியே செம்ம வருமானம் பார்க்க இதுதான் வழி!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் நந்தினியாக நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். கிராமப்புறங்களிலும் இவருக்கு மவுசு அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவி-யின் ராசாத்தி சீரியலிலும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் தமிழில் நடித்திருந்தாலும் தமிழில் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் தான் பவானி அறிமுகமானார். அதன்பிறகு விஜய் டிவியில் ’ரெட்டைவால் குருவி’ என்னும் சீரியலிலும் நடித்திருந்தார்.
,
ஹைதராபாத்தைச் சேர்ந்த பவானி பிறந்து வளர்ந்தது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில். சின்ன வயதில் அம்மாவுடன் சேர்ந்து தினமும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம் பவானி. தனது 21 வயதில் மாடலிங் துறைக்குள் வந்த பவானி பின்னர் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார்.
பின்னர் சின்னதாக இருந்த தவறான புரிதலால், 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார் பிரதீப். இதை சற்றும் எதிர் பார்க்காத பிரதீப்பின் பெற்றோர் பவானி மீது போலீஸில் புகார் அளித்தனர். அனைத்தையும் கடந்து வந்தார் பவானி. காதல் கணவர் இப்படி செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத பவானி, தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள எண்ணினார். சில நாட்களில் தான் ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.
,
அந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இளம் வயதிலேயே காதல் கணவரை இழந்த பாவானி எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் உருண்டோடியது. பின்னர் தனது நண்பர் ஆனந்தை திருமணம் செய்துக் கொள்வதாக கடந்த வருடம் அறிவித்தார். புயலுக்குப் பின் அமைதி என்பது போல, கஷ்டங்களை கடந்து தைரியமாக எதிர்த்து நிற்கிறார் பவானி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”