ஒரே மகனை ஹாஸ்டலில் சேர்த்த பிரபல காமெடியன் நிஷா: என்ன காரணம்?

விஜய் டிவியின் பிரபல காமெடியன் அறந்தாங்கி நிஷா கருப்பு ரோஜா என்னும் தனது சொந்த யூடியுப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது யூடியுபில் டிரெண்டாகி உள்ளது.

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். அதில் இவரது நகைச்சுவை பேச்சுகள் மக்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக வீட்டுக்குள் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்னும் யூடியுப் சேனலை ஆரம்பித்து அதில் தனது அன்றாட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.  அப்படி சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ யூடியுபில் டிரெண்டாகி வருகிறது.

நிஷாவுக்கு. அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நிஷா தனது மகன் அஷ்ரத்தை ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். அதுகுறித்து யூடியுபில் நிஷா பேசியது; அஷ்ரத் மிகவும் சமத்தான குழந்தை. அவன்தான் என்னுடைய கனவு. அறந்தாங்கியில் அம்மாவிடம் தான் அவர் வளர்ந்தான். 1 முதல் 5 வரை அங்குதான் படித்தான். விளையாட்டில் அவனுக்கு மிகவும் ஆர்வம் உள்ளது. எனக்கும் படிப்பெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அவன் நிறைய விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவன் மிகவும் அமைதியானவன். யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டான். அதனால் ஹாஸ்டலில் இருந்தால் புதிய நண்பர்களிடம் பழகுவான். அவனுடைய மனது மாறும். மேலும் அவன் கூடைப்பந்து, நீச்சல் என நிறைய விளையாட்டில் ஈடுபடுவான்.  இன்று அவனை பார்கக்கூடிய நாள். அவனை மதியம் சாப்பிட வெளியே அழைத்து செல்லப் போகிறேன் என்று கூறி மகனை சந்தித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் தனது கணவர் மற்றும் மகளுடன் மகன் அஷ்ரத்தை சந்திக்க நிஷா பள்ளிக்கு போகிறார். நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஷ்ரத் தனது அம்மா  மற்றும் தங்கையை பார்த்ததும் ஓடோடி வருகிறான். பின்னர் மகனை அழைத்துக் கொண்டு, மதிய உணவு சாப்பிட தன்னுடைய நிஷா தோழி வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மகனை சாப்பிட வைத்த பிறகு, அணைத்து தூங்குகிறார்.  பின்னர் தனது மகனை மீண்டும் ஹாஸ்டலில் கொண்டு விடுவதுடன் வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ தற்போது யூடியுபில் டிரெண்டாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv comedian arandhangi nisha video trending on youtube channel

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com