'அப்செட்டில் வந்த என்னை வீடு போகும் வரை சிரிக்கவைத்த புகழ்' ஷகிலா நெகிழ்ச்சி
அருகே இருந்த புகழ் இடம் ‘அடேய் சூடா இருக்கும்டா’ என சொல்லி முடிப்பதற்குள் சூடாக இருந்த உருளைக்கிழங்கில் கை வைத்துவிட்டு அலற நான் வீடு திரும்பும் வரை அதை நினைத்து சிரித்தேன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில், போட்டியாளர்களாக நடிகை ஷகிலா, கனி, பவித்ரா லட்சுமி, நடிகர் அஸ்வின், டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோமாளிகளாக புகழ், தங்கதுரை, சுனிதா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டியில், குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டிலை கனி வென்றார். ஷகிலா ரன்னர் அப் 1 என இரண்டாம் இடத்தையும் அஸ்வின் ரன்னர் அப் 2 என மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
Advertisment
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு, நடிகை ஷகிலா முதன்முறையாக ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரவு ஒரு தொலைபேசி அழைப்பால் அப்செட்டில் இருந்ததாகவும் அதனால், நிகழ்ச்சியில் முதல் ஒரு 10 நிமிடங்கள் இருந்துவிட்டு பிறகு வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற புகழ் என்னை வீட்டுக்கு செல்லும் வரை சிரிக்க வைத்தான் என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
நடிகை ஷகிலா அந்த பேட்டியில் கூறியதாவது: “அன்றைக்கு நான் செம்ம அப்செட்டாக இருந்தேன். முந்தைய நாள் இரவு வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் அடுத்த நாள் வெளியேறிவிட்டு அந்த பிரச்சனையை சொல்லிவிடலாம் என்கிற முடிவில்தான் போனேன். அப்போது ஆலு பரோட்டா டிஷ் செய்ய வேண்டும் என டாஸ்க்..10 நிமிடம் முயற்சி செய்துவிட்டு வெளியேறிவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்போது அருகே இருந்த புகழ் இடம் ‘அடேய் சூடா இருக்கும்டா’ என சொல்லி முடிப்பதற்குள் சூடாக இருந்த உருளைக்கிழங்கில் கை வைத்துவிட்டு அலற நான் வீடு திரும்பும் வரை அதை நினைத்து சிரித்தேன். அப்படி, நான் சிரித்தது மக்களிடையே இப்படி வைரலாகும் என நினைக்கவே இல்லை. புகழ் தான் என்னை அம்மா என சொல்ல ஆரம்பித்தான்.” என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடந்த நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"