வந்தாச்சு வனிதா… கூட யாரெல்லாம்னு பாருங்க! ‘குக் வித் கோமாளி’ கலாட்டா

Vijay TV Cook With Comali Celebration round : இந்த வார ‘குக் வித் கோமாளி- சீசன் 2 ‘ நிகழ்ச்சியில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா ஆகியோர் கலந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வார ‘குக் வித் கோமாளி- சீசன் 2 ‘ நிகழ்ச்சியில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா ஆகியோர் கலந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் குக் வித் கோமாளி- சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது வெற்றியைப் பெற்றார். ரம்யா பாண்டியன் – 3வது வெற்றியாளர்.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்ட் கிடையாது. சீசன் 1 மற்றும் சீசன் 2 போட்டியாளர்களுக்கு இடையே இந்த வார சமையல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதுவும், செலிப்ரேஷன் ரவுண்டாக அமைய உள்ளது. எனவே, இந்த வார நிகழ்சிகளில் நகைச்சுவை நடிகர்களின் கோமாளித் தனங்கள் பார்வையாளர்களை மேலும் அதிகமாக சிரிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள். மணிமேகலை, சிவாங்கி,பாலா, புகழ் போன்ற நகைச்சுவை நடிகார்கள் சிறந்த கோமாளிகளாக பாராட்டப்படுகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv cook with comali celebration round season 1 contestant returning

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com