‘அசிங்கமாகிடும்’ நேரடியாக மோதிய கனி- பாபா பாஸ்கர்; விஜய் டிவி பிரியங்கா ஷாக்

ஸ்டார்ட் மியூசிக்கில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள் கலந்துக் கொண்ட எபிசோடின் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக கும் வித் கோமாளி நிகழ்ச்சி வலம் வந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னராக கெளரவிக்கப்பட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவுற்றதை கொண்டாடும் நோக்கில், விஜய் டிவி யின் மற்றுமொரு பிரபல நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் அழைக்கப்பட்டனர்.

ஸ்டார்ட் மியூசிக்கில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள் கலந்துக் கொண்ட எபிசோடின் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது. வெங்கடேஷ் பட், அஸ்வின், கனி ஆகியோர் ஒரு அணியிலும், மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர் ஆகியோர் எதிர் அணியிலும் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில், விளையாடிய அவர்களில் குறிப்பிட்ட போட்டியில் பாபா பாஸ்கர் தோல்வியடைந்ததாக தெரிகிறது. அப்போது, எதிரணியில் இருந்த கனி, அவுட் ஆகீட்டிங்க என பாபா பாஸ்கரைப் பார்த்து சொல்லியுள்ளார். அதற்கு பாபா பாஸ்கர், நான் கொஞ்சம் பதட்டப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார்.

இதற்கு கனி, ‘அப்பறம் அசிங்கமாகிடும்’ என கூற, ‘என்ன அசிங்கம்னுலாம் பேசுறீங்க, அப்பறம் தாப்பாகிரும்’ என பாபா பாஸ்கர் ஆத்திரத்தில் பலத்த குரலில் கத்த தொடங்குகிறார். உடனே, மதுரை முத்து, சரி வாங்க வாங்க என கூற, அவருடனும் மோதல் பேச்சையே தொடர்கிறார் பாபா பாஸக்ர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தொகுப்பாளினி பிரியங்கா, வாயடைத்து நிற்கிறார். இதோடு, அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது. நிகழ்ச்சியில் என்ன ஆச்சு, எதுக்கு இந்த சண்டை என ரசிகர்களும் விழிப் பிதுங்கி நிற்க, வரும் ஞாயிற்றுக் கிழமை வரை நாம் காத்திருக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv cook with comali contesting start music kani and baba baskar clashed

Next Story
இதையெல்லாம் செய்ய பெரிய மனசு வேணும்: சமந்தாவுக்கு குவியும் பாராட்டுsamantha gifted a car, samantha gifted a for very poor auto driving girl, சமந்தா, நடிகை சமந்தா, 7 சகோதரிகளை ஆட்டோ ஓட்டி காப்பாற்றும் பெண்ணுக்கு கார் பரிசு, கார் பரிசளித்த நடிகை சமந்தா, actress samantha, samantha akkineni, samantha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com