scorecardresearch

Live-லயும் Life-லயும் இணையும் புகழ்- பவி; கூடவே தர்ஷா..! என்னா ஒரு கெமிஸ்ட்ரி?

Live-லயும் Life-லயும் இவர்கள் இல்லாமல் எதுவும் கிடையாது என்று பவித்ரா, தர்ஷாவுடன் சேர்ந்து புகழ் ரைமிங்காக பேசியது ஜாலியாகவும் டச்சிங்காகவும் அமைந்துள்ளது.

vijay tv, cook with comali, cook with comali fame pugazh, விஜய் டிவி, குக் வித் கோமாளி, புகழ், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, வைரல் வீடியோ, புகழ் பவித்ரா தர்ஷா குப்தா லைவ் வீடியோ, actress pavithra lakshmi, dharsha gupta, pugazh pavithra lakshmi dharsha gupta live video, viral video

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய புகழ், பவித்ரா லட்சுமி, தர்ஷா மூன்று பேரும் ஒரே காரில் லைவ்வில் அடித்த லூட்டி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், கனி டைட்டிலை வென்றார். நடிகை ஷகிலா ரன்னர் அப் 1, நடிகர் அஸ்வின் ரன்னர் அப் 2 இடங்களைப் பிடித்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா ஆகியோரும் பிரபலமானார்கள். இதில் கோமாளியாக பங்கேற்ற தனது நகைச்சுவையாலும் ரியாக்‌ஷனாலும் ரசிகர்களைக் கவர்ந்து சிரிக்க வைத்தார். அதுமட்டுமில்லாமல், நிகழ்சியில் புகழ், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி அடித்த அடித்த நகைச்சுவை லூட்டிகள் வேற லெவலில் இருந்தடு. குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே புகழ் என்கிற அளவுக்கு பிரபலமானார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த நிலையில், அஸ்வினும் புகழும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்கள். இந்த நிலையில், புகழ், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா ஒரே காரில் லைவ் வீடியோவில் பேசிய புகழ், Liveலயும் சரி Lifeலயும் சரி நீங்க ரெண்டு பேரும் இல்லாமல் எதுவும் இல்லை என்று ஜாலியாக பேசியுள்ளார். இந்த லைவ் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்குள் என்னா ஒரு கெமிஸ்ட்ரி என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

புகழ், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா 3 பேரும் ஒரே காரில் இருந்து லைவ் வீடியோவில் உரையாடும்போது பவித்ரா, “புகழ் அண்ண என்னை விட்டுட்டி லைவ் போனார் என்கிற ஒரே காரணத்தினால,” என்று கூறுகிறார். அப்போது, புகழ் தனக்கே உரிய ரியாக்‌ஷன் உடன், “என்னது உன்னை விட்டுட்டு நான் லைவ் போனனா? லைவ்லயும் சரி லைஃப்லயும் சரி உங்களை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன் தெரியும்ல” என்று கூறுகிறார்.

உடனே பவித்ரா, அருகே இருக்கும் தர்ஷாவிடம், “புகழ் சொன்னது கேட்டுச்சா?” என்று கேட்டு சிரிக்கிறார்.

தர்ஷா குப்தா, “என்னவோ சொல்லிட்டிருந்தீங்க… என் மூஞ்சிய காட்டுங்க…” என்று கேட்டு சிரிக்கிறார்.

புகழ், “மக்களே ஆட் ஷூட்” என்று சொல்ல, இடையில் தர்ஷா, “மாமா இல்லாம நாங்க நடிக்க மாட்டோம்னு சொன்ந்தால” என்று கூறுகிறார். தொடர்ந்து பேசும் புகழ், “ஒரே பிரச்னை, நேத்டு ஈசிஆர்ல ரூம் எடுத்து தங்கி, இவங்க ஷூட்டிங்க்கு மாமா இருக்கனும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக இங்கேயே தங்கி” என்று கூறுகிறார்.

அப்போது குறுக்கிடும், பவித்ரா, “மாமா இல்லாம நாங்க மூச்சு கூட விடமாட்டோம்… எங்களுக்குள்ள என்ன அண்டர் ஸ்டாண்டிங் பார்த்தீங்களா?” என்று பவித்ரா தர்ஷா இருவரும் கலகலவென சிரிக்கிறார்கள்.

பவித்ரா, தர்ஷாவின் கவுண்ட்டர்களுக்கு இடையில், தொடர்ந்து பேசும் புகழ், “மனிதனுக்கு இப்படி ஒரு 2 கிடைப்பது ரொம்ப கடினம். புகழ் வேற லெவல்” என்று கூறுகிறார்.

போன்ல பிரைட்னஸ் அவ்வளவுதானா என்று புகழ் கேட்க, பவித்ரா, “புகழ் பிரைட்டா இருக்கிறதனால, பிரைட்னஸ் கம்மியா வச்சோம்” என்று கூறி சிரிக்கிறார்.

அப்போது, ரசிகர்கள் லைவ் சாட்டில் “ஹாய் பிரதர், ஹாய் அக்காஸ், என்ன ஒரே ஜோக்கா இருக்கு” என்று கேட்க, புகழ் அந்த ரசிகருக்கு “எங்க எல்லா ஜோக்கும் தீர்த்து போச்சு” என்று கவுண்ட்டர் கொடுக்கிறார்.

அப்போது, புகழ், இந்த யூடிப்ல எப்படி போடுவாங்க தெரியுமா? “புகழுக்காக பவித்ராவும் தர்ஷாவும் அடித்துக்க்கொண்டார்கள் என்று போடுவார்கள்” என்று கூறுகிறார். அப்படியெல்லாம் இல்லை இணைந்துதான் இருக்கிறோம் என்று பவித்ரா கவுண்ட்டரைப் போடுகிறார். இப்படி ஜாலியாக புகழ், பவித்ரா, தர்ஷா 3 பேரும் லைவ் வீடியோவில் பேசியுள்ளனர். இவர்கள் 3 பேரும் லைவ் வீடியோவில் ஜாலியாக பேசுவதைப் பார்த்து சிரித்த ரசிகர்கள், இவர்களுக்குள் என்னா ஒரு கெமிஸ்ட்ரி என்று பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Live-லயும் Life-லயும் இவர்கள் இல்லாமல் எதுவும் கிடையாது என்று பவித்ரா, தர்ஷாவுடன் சேர்ந்து புகழ் ரைமிங்காக பேசியது ஜாலியாகவும் டச்சிங்காகவும் இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv cook with comali fame pugazh actress pavithra lakshmi and dharsha gupta live video conversation goes viral