சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மணிமேகலை – ஹூசைன் தம்பதி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இதற்காக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே ஆக அறிமுகமானவர் மணிமேகலை. அதன்பின் பல்வேறு திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் ஹூசைனுடன் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை – ஹூசைன் ஜோடி மூன்றாம் இடம் பிடித்தனர்.
அதன் பின் மணிமேகலை விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3ல் தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும் மணிமேகலை – ஹூசைன் தம்பதி சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, சுவாரஸ்யமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தம்பதி புதிதாக BMW சொகுசு காரை வாங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. அதில் சொந்த முயற்சியில் அடுத்த சாதனை, என்னுடைய கனவு கார் இது, விநாயகர் சதுர்த்தி அன்று கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார். புதிய சொகுசு கார் வாங்கிய இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாரதிகண்ணம்மா வில்லி வெண்பா, நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil