New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/pugazh.jpg)
ஹேப்பி பர்த்டே பார்ட்னர்… லவ் யூ என்ற பதிவுடன் ஒரு பெண்ணுடன் குக் வித் கோமாளி புகழ் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
Vijay TV Cook with comali Pugazh partner photo goes viral: குக் வித் கோமாளி புகழ், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வரும் நிலையில், அது அவரது வருங்கால மனைவியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் விரைவில் வெளியேறிவிட்டாலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’சிரிப்புடா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும் அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது, விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ’குக் வித் கோமாளி’ தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
குக் வித் கோமாளி இரண்டு சீசன்களிலும் புகழ் செய்யும் சேட்டைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் அவருக்கு படவாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. இதனால் அவர் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டியிருந்தது. இதையடுத்து புகழ் சந்தானத்துடன் சபாபதி, அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு, நிச்சயம் புகழ் வருவார் என சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
இதற்கிடையே ஒரு பெண்ணுடன் புகழ் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் புகழ் தற்போது, ஹாப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ என்று ஒரு பெண்ணோடு இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும் சிவாங்கி ஹாப்பி பர்த்டே அக்கா என்று வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புகழின் வருங்கால மனைவி என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.