விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோ. கடந்த 4 சீசன்களாக எந்த வம்பும் இல்லாமல் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த ஷோ, 5வது சீசன் புரோமோ வந்தது முதலே பல சர்ச்சைகளை சந்தித்தது.
தயாரிப்பில் இருந்து மீடியா மஸன்ஸ், செஃப் வெங்கடேஷ் பட் விலகியது முதல் இப்போது உச்சக்கட்டமாக ஷோ இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த போது, குக்காக வந்து கலந்து கொண்ட பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதலால் மணிமேகலை விலகியது வரை, ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ்பஸ்டராக இருந்த ஷோ, இப்போது அவர்களை மன அழுத்தத்துக்கு தள்ளும் அளுவுக்கு இறங்கி விட்டது.
இவ்வளவு சம்பவங்கள் இருந்தாலும் இப்போது ஷோ இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
சமீபத்தில் நடந்த அரையிறுதி சுற்றில் பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், சுஜிதா தனுஷ், அக்ஷய் கமல் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார் சுஜிதா, அடுத்ததாக பிரியங்கா, இர்பான் தேர்வாகி பைனலிஸ்ட் ஆகினர்.
இந்த சூழலில் மணிமேகலை விவகாரமும் சூடுபிடித்த நிலையில், குக்கு வித் கோமாளி சீசன் 5 இன் டைட்டில் வின்னராக யார் முடிசூடுவார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் ஷூட்டிங் முடிந்த நிலையில் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி பிரியங்கா, இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்.
இதுகுறித்து பிரியங்காவின் நண்பர் பிக் பாஸ் அமீர் கூறுகையில், ‘அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி இன்னும் பிரியங்கா தான் ஜெயித்தார் என்று அறிவிக்கவில்லை. ஆனால் அன் அஃபிஷியல் ஆக நான் இதை சொல்கிறேன். பிரியங்கா டைட்டில் வெற்றி பெற்று விட்டார். நாங்கள் அந்த வெற்றியை கூட கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறோம்’, என்று கூறியிருந்தார்.
இர்ஃபான் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
சுஜிதா தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று இதில் கலந்துகொண்ட பலரும் கூறி வந்த நேரத்தில் பிரியங்கா வெற்றி, ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“