விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எல்லோரையும் தனது கவுண்ட்டர் டயலாக்குகளால் கலாய்த்து திணற வைக்கும் கலக்கப்போவது யாரு காமெடியன் பாலாவையே பதில் கவுண்ட்டர் போட்டு காத்து காட்டியிருக்கிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொலைக்காடிகளில் இப்போதெல்லாம் சீரியல்கள் அளவுக்கு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கோமளிகளாலும் சமைக்கும் பிரபலங்களாலும் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களும் கோமாளிகளும் செய்யும் அட்டகாசங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளன.
அதிலும், கலக்கப்போவது யாரு காமெடியன் பாலா பங்கேற்பாளர்கள் யாராக இருந்தாலும் தனது கவுண்ட்டர் டயலாக்குகளால் ஏகத்துக்கு கலாய்த்து திணறடிப்பார். ஆனால், அந்த பாலாவே மாட்டிக்கிட்டு முழிக்கும் அளவுக்கு ஒரு பாக்கிலட்சுமி சீரியல் நடிகை செமையாக கவுண்ட்டர் கொடுத்து கெத்து காட்டி தெறிக்கவிட்டிருக்கிறார்.
விஜய் டிவி இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புரோமோவை வெளியிட்டுள்ளது. பாலாவையே ஓட விட்ரியே மா என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில், பாலா முதல்வன் பட ரகுவரன் கெட்டப்பில் வந்து பாக்கிலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவிடம் இது டூ லேட் என்று சொல்ல அதற்கு அவர் இது ஆம்ப்லேட் என்று சொல்கிறார். அதோடு, பாலா ஓரளவுக்கு மட்டும்தான் நான் பொறுமையா இருப்பேன். அதற்கு அப்புறம் ஸ்டவ்வுக்கு அடியில பாம்ப் வச்சுடுவேன்... என்று சொல்ல, ஸ்டவ்வுக்கு அடியில கேண்டில்தான் வச்சிருக்கேன் வைங்க என்று மீண்டும் ஒரு கவுண்ட்டர் போடுகிறார். நோஸ்கட்டான பாலா நான் வேலைய விட்டு போறேன்” என்று சொல்லி ஓடுகிறார்.
கவுண்ட்டர் போட்டு கட்டையைக் கொடுக்கும் பாலாவையே மிரளவிட்டு கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் பெர்பார்மன்ஸ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"