பல்பு வாங்கிய வனிதா… கத்தியை தூக்கிய ஷகிலா… கவனமா இருங்கப்பா!

Cook With Comali hotstar Episodes : இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏதோ ஒரு சம்பவம் இருக்கு என விஜய் டிவி ரசிகர்களை பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த வார ‘குக் வித் கோமாளி’ ரியால்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி வருகிறது.

சீசன் `1 போட்டியாளர்களுக்கும், சீசன் 2 போட்டியாளர்களுக்கும் இடையே சமையல் போட்டி விறுவிறுப்பான சமையல் போட்டி இந்த வார நிகழ்ச்சியில் நடக்க இருக்கிறது. எலிமினேஷன் இல்லமால் செலிப்ரேஷன் ரவுண்டாகவும் அமைய உள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி வீடியோ ப்ரோமோவை விஜய் டிவி சற்றுமுன் வெளியிட்டது. அதில் காமெடி நடிகர் பாலா, சீசன் 1 வெற்றியாளர் வனிதாவை  வழக்கம் போல் கலாய்க்கிறார்.

பாலா: வெளில எல்லாம் என்ன சொல்றாங்க?

வனிதா:  எல்லாம், இறுதிப் போட்டி பத்தி இன்னும் பேசிட்டிருகாங்க

பாலா: எப்படி, உங்களுக்கு டைட்டில் கொடுதாங்கன்னு பேசுறாங்களா…. என்று பதிலளித்தார்.

மறுபுறம், பழைய ஜோக் தங்கதுரை காமெடியை  கேட்ட நடிகை ஷகீலா, உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில்  கத்தியை தூக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏதோ ஒரு சம்பவம் இருக்கு என விஜய் டிவி ரசிகர்களை பேசத் தொடங்கியுள்ளனர்.

 

 

 

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேரத்தை 1 மணி நேரம் என்பதில் இருந்து அதிகப்படுத்த வேண்டும், சந்தோஷத்துக்கு 1 மணி நேரம் பத்தாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv cook with comali today show hotstar episodes cook with comali celebration round

Next Story
மேக்கப் இல்லாட்டியும் நீங்க அழகுதான்மா..! செம்பருத்தி ஸ்டார்ஸ் மீட்டிங்Tamil Serial news in tamil zee tamil sembaruthi serial actress durga meeting with sembaruthi serial stars
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com