Advertisment

'எனக்கு சட்டை, ஷூ வாங்கிக் கொடுத்தவங்க யாரு தெரியுமா?' பாலா எமோஷனல் ஸ்டோரி

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் பாலா, வாய்ப்பு கொடுத்தவர்களையும் தனக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுத்தவர்களையும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்து எமோஷனலாக பேசினார்.

author-image
WebDesk
New Update
vijay tv, cooku with comali, bala, kpy bala, விஜய் டிவி, பாலா, பாலா எமொஷனல் பேச்சு, மா க ப ஆனந்த், bala emotional speech, ma ka pa anand offer dress to bala, vijay tv varuththappadatha vaalibar sangam, bala parents

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் பாலா, ஊர்ல சிவனேன்னு கிடந்த தன்னை சென்னைக்கு வரவழைத்து வாய்ப்பு கொடுத்தவர்களையும் தனக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுத்தவர்களையும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்து எமோஷனலாக பேசினார்.

Advertisment

ஒல்லிக்குச்சி உடம்பு, வெட்டுக்கிளி என்று பலரும் கலாய்த்தாலும் பதிலுக்கு எல்லோரையும் தெரிக்கவிட்டு கலாய்ப்பவர் கலக்கப்போவது யாரு பாலா. பாலாவின் கவுண்ட்டர் டயலாக்குகளில் சிக்கி சிரிப்பு அலைகளில் மிதந்தவர்கள் பலர். தற்போது பாலா, விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவி 6வது ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக, 4 நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில், ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், குக்கு வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து பலர் கலந்துகொண்டனர். அதில், பாலாவும் கலந்துகொண்டார்.

ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பான வருத்தப் படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா எமோஷனாலாக பேசினார். பாலாவுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சிக்கு அவருடைய பெற்றோர்களை வரவழைத்திருந்தனர். பெற்றோர்களை மேடையில் பார்த்த பாலா ரொம்ப எமோஷனலாகி விட்டார். அப்போது பாலாவைப் பற்றி பேசிய அவருடைய அம்மா “பாலாவின் முழு பெயர் பாலன் ஆகாஷ்; பாலா 3 வயதில் 50 ஜிகே கேள்வி பதில்களை சொவான்; பாலாவை 7 வயதில் டிரம்ஸ் க்ளாஸ்க்கு அனுப்பினேன். பாலா ஷெட்டில் கார்க் ஸ்டேட் லெவல் பிளேயர்” என்று ஒரு புதிய தகவலைக் கூறினார். தொடர்ந்து பேசிய பாலாவின் அம்மா, “பாலாவை டாக்டராக்க ஆசைப்பட்டோம். ஆனால், அவர் ஆக்டர் ஆகிவிட்டார். இந்த பிள்ளை நீரில் போட்டா நீந்தும். நிலத்தில் போட்டா ஓடும்.’ என்று பாலாவின் இயல்பை மிகவும் அழகான வார்த்தைகளில் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தான் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றியும், தனக்கு யார் யார் எல்லாம் உதவினார்கள் என்பதையும் மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். ‘ஊர்ல சிவனேனு இருந்தேன். நவீன் அண்ணாதான் போன் பண்ணி வர சொன்னாரு. அப்படி கிடைச்ச வாய்ப்பு தான் இது. பாலாஜி அண்ணா தான் நல்ல சட்டை, ஷூலாம் வாங்கி கொடுத்தார். கலக்கப்போவது யாரு சதீஷ் உதவி செய்தார். ஒருமுறை வடபழனி பிரிட்ஜ் ஃபிளை ஓவரில் நடந்துபோய்க் கொண்டிருந்தேன். அப்போது மா.க.பா அண்ணன் போன் பண்ணி எங்கடா இருக்கனு கேட்டார். நான் சொன்னேன். பிறகு மா.கா.பா அண்ணன், ஒரு சூட்கேஸ் நிறைய டிரெஸ் வாங்கி சரத்திடம் கொடுத்து என்னிடம் கொடுக்க சொன்னார்.” என்று மா.க.ப.ஆனந்த் மற்றும் பாலாஜி என தனக்கு நல்ல டிரஸ் வாங்கிக் கொடுத்ததை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.

மேலும், “தனது அம்மா, பூங்குழலி கவரிங் நகைகளை விற்பனை செய்து அதில் வரும் 8, 9 ரூபாய் பணத்தை வைத்து எங்களை வளர்ந்தார். திடீர்னு துணி தைப்பாங்க… ஆனால், இப்போ, எங்க அம்மா எங்கயாவது போனால், இவங்க பையன் விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட்டா? என்ன பழைய துணி போட்டிருக்காங்க என்று கேட்பார்கள். அவர்களுக்காக இந்த நிகழ்ச்சி மூலம் சொல்லிக்கிறேன். இது எங்க அம்மா கட்டியிருக்கும் பட்டுப்புடவை… என்னம்மா விலை ஸ்டிக்கைர் ஒட்டி இருந்ததை கிழித்துவிட்டாயா?” அதே கிண்டல் கலாய்க்கும் இயல்பு மாறாமல் மிகவும் உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய, “பாலா வந்துட்டான் மேலனு யாரும் சொல்ல தேவையில்ல. பாலா அவ்ளோதான் போலனு சொல்லாம இருந்தா போதும்.” என கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bala Vijay Tv Cooku With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment