விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு சமையல் நிகழ்ச்சி. ஆனால், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பாட் இருவரும் சமையல் டாஸ்க்குகளை சொல்வதோடு நடுவர்களாகவும் இருந்து செயல்பட்டு வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலங்கள் செய்யும் சமையலில் கோமாளிகள் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை வனிதா வெற்றி பெற்றார். ரம்யா பாண்டியன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். முதல் சீசனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா, பவித்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இவர்களுடன் கோமாளிகளாக புகழ், மணிமேகலை, சூப்பர் சிங்கர் பாடகி ஷிவாங்கி, கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் நகைச்சுவைகளும் தொடர்ந்து வருகிறது.
இந்த வாரம், ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி எபிசோடில் போட்டியாளராக விளையாடி வரும் கனிக்கு பிறந்தநாள் என்பதால் நிகழ்ச்சி போட்டியாளர்கள், கோமாளிகள், பங்கேற்பாளர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அனைவரும் வாழ்த்து கூற கனி ஆனந்த கண்ணீர் விட்டு அழுது மகிழ்ச்சியை வெளிப்படுட்தினார். அதோடு, வெங்கடேஷ் பாட், சூப்பர் சிங்கர் பாடகி ஷிவாங்கியை அழைத்து கனிக்கு பிறந்தாள் நல்ல ஒரு பாட்ட பாடு என்று கூற, ஷிவாங்கி உடனடியாக, “மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்...” என்ற பாடலைப் பாட அனைவரும் கோராசாக ஹம்மிங் செய்ய குக் வித் கோமாளி கலை கட்டியது.
அதனால், இந்த வாரம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஷிவாங்கியின் பாடல், கனியின் ஆனந்த கண்ணீர் கோமாளிகளின் நகைச்சுவை என்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனிக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததையும் கனி ஆனந்த கண்ணீர் விட்டதையும் விஜய் டிவி ட்விட்டரில் புரோமோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"