விஜய் டியியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று கலக்கி வரும் புகழ் இரண்டு வாரங்களாக நிகழ்ச்சியில் பங்கேற்காத மணிமேகலையை பார்க்காததால் பாசமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட அதற்கு மற்ற போட்டியாளர்களும் கம்மெண்ட் செய்ய இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது. பிரபல சமையல் கலைஞர்கள், செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பாட் இருவரும் சமையல் டாஸ்க்குகளை அளிக்க பிரபலங்களும் கோமாளிகளும் அடிக்கும் லூட்டியும் கவுண்டர்களும்தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று புகழ் செய்யும் ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு பெரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்தாலும், புகழ் நகைச்சுவை ரிஷாக்ஷனும் கவுண்டர் டயலாக்குகளும் லூட்டிகளும்தான் பார்வையாளர்களை சிரிப்பலையில் மிதக்கச் செய்யும். இதனால், புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
அதே போல, தொகுப்பாளினியாக தொடங்கி இன்று விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சாலும் இயல்பான நகைச்சுவை கவுண்ட்டர்களால் ரசிகர்களை கவர்ந்தவர் மணிமேகலை. இவர் கடந்த 2 வாரங்களாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ரசிகர்களும் மணிமேகலை ஏன் வரவில்லை என்று தேடிக்கொண்டிருக்க புகழும் நிகழ்ச்சியில் மணிமேகலை இல்லாததால் ரொம்ப ஃபீல் பண்ணுவதாக பதிவிட்டுள்ளார்.
புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ உன் ஞாபகம் தான் செல்லம் வருது மிஸ் யூ என மணிமேகலை” டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த மணிமேகலை, “மிஸ் யூ டா எல்லாரையும் நானும் மிஸ் பண்ணுகிறேன் சீக்கிரம் வந்து விடுகிறேன்” கம்மெண்ட் செய்திருக்கிறார். புகழ் - மணிமேகலை இருவரின் பதிவுகளையும் பார்த்த ரசிகர்கள் மணிமேகலை விரைவாக குணமடைந்து நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை 2 வாரங்களாக பங்கேற்காததற்கு அவருக்கு காலில் லேசாக காயம் ஏற்பட்டதே காரணம் என்று தெரியவந்துள்ளது. அதோடு, இனிவரும் எபிசோடுகளில் செமயாக கலக்கி இருப்பதாகவும் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பங்கேற்காததால் வருத்தம் அடைந்த புகழ் பாசத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட அதற்கு மணிமேகலை, மிஸ் யூ டா சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று பதில் பதிவிட ரசிகர்கள் கம்மெண்ட் செய்ய இவர்களின் பதிவு வைரலாகி வருகிறது.