விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ஷிவாங்கி தன்னுடைய குரலுக்காக பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்து கேலியும் கிண்டலும் எதிர்கொண்டதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ஷிவாங்கி தன்னுடைய குரலுக்காக பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்து கேலியும் கிண்டலும் எதிர்கொண்டதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ஷிவாங்கி தன்னுடைய குரலுக்காக பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்து கேலியும் கிண்டலும் எதிர்கொண்டதாக கண்ணீருடன் கூறியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாடகி ஷிவாங்கி. இவர் தனது பாடலால் மட்டுமல்ல தனது இயல்பான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பாட் இருவரும் சமையல் டாஸ்க்குகளை அளிக்க பிரபலங்கள் கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisment
Advertisements
குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்சியில் நடிகை ஷகிலா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து, நடிகர் அஸ்வின், நடிகைகள் தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கப்போவது யாரு புகழ், பாலா, சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஷிவாங்கி, விஜே மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ் நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி, “ஸ்கூல்ல இருந்து என்னோட இந்த குரலை வச்சி நிறைய கலாய்ச்சி இருக்காங்க… பசங்களாம் போனா ஏ அந்த பொண்ணா ஒரு மாதிரியா கியாங் கியாங்னு பேசுமே… அப்படினு அந்த மாதிரி பார்ப்பாங்க… குக் வித் கோமாளியில் வந்தேன். சரி நாம நாமலா இருப்போம்னு நினைச்சுதான் வந்தேன். இப்போது என்னை எல்லோரும் அவங்க வீட்ல இருக்கிற ஒரு குழந்தையா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இப்போ எங்கயாவது போனால் ஷிவாங்கி பிள்ளை.. ஷிவாங்கி பிள்ளை.. என்று சொல்லி வயதானவர்கள் எல்லோரும் ஆசீர்வாதம் எல்லாம் பண்ணிட்டு போறாங்கா..” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஏப்ரல் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. பாடகி ஷிவாங்கி தன்னுடைய குரலுக்காக பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்து கேலியும் கிண்டலும் எதிர்கொண்டதாக கண்ணீருடன் கூறியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.