தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வெளியான ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்யும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டிடி மேக் அப் இல்லாமல் வெளியிட்டிருக்குக் இந்த வீடியோக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ‘ரகிட ரகிட ரகிட…’ என்ற பாடல் வரிகளை டிடி டப்ஸ்மாஷ் செய்தார். அந்த நாலு பேர இதுவரைக்கும் பாத்ததில்ல நானும்.. எனக்கு தேவப்பட்ட நேரம் அந்த பரதேசியக் காணும். எனக்கு ராஜா.... " என்ற வரிகளுக்கு டிடி தனக்கான பாணியில் டப்ஸ்மாஷ் செய்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பதிவல், " எனது அப்பட்டமான மனதின் குரல், உணமையான உணர்ச்சிகள்" என்று தெரிவித்தார்.
டிடி- யின் இந்த டப்ஸ்மாஷ் பதிவு அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.