Vijay TV DD: தமிழ் சின்னத்திரை உலகில், பிரபலமானவர் ஆங்கர் டிடி. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் ஸ்டைல், உடை போன்றவற்றால் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அதோடு ‘விசில்’, ’பவர் பாண்டி’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அப்போவே ஸ்டைலிஷ் தளபதி: வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்
20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளினி பணியை தொடங்கிய டிடி, அதே நிறுவனத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேண்டும் என நினைக்கும் பலருக்கும் முன்னோடியாக விளங்குகிறார். ஜோடி, காஃபி வித் டிடி, பாய்ஸ் Vs கேர்ள்ஸ், விஜய் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது, ரசிகர்கள் அதிர்ச்சியாகும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் டிடி. காலில் கட்டு போட்டிருக்கும் படத்துடன், "லாக்டவுன் ஆரம்பித்த நேரத்தில் தான் இப்படியானது. எனது வலது கால் சரியாகி விட்டது என நினைத்த தருணத்தில், இடது கால் ஃப்ராக்ச்சர் ஆகிவிட்டது. மிகவும் வலியும், வேதனையுமாக இருக்கிறது. எனது கவனத்தை எழுதுதல், OTT-யில் படம் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பாஸிட்டிவான விஷயங்களைக் கண்டறிதல் போன்றவற்றில் செலுத்தினேன். இறுதியாக இந்தப் படத்தைப் பதிவிட வலிமை கிடைத்தது. என்னை நேசிப்பவர்களுக்கு இது வருத்தமளிக்கும். ஆகையால் அவர்களை இன்னும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இதிலிருந்து நிச்சயம் நாம் அனைவரும் வெளியில் வருவோம். என்னை லைவ் சாட்களுக்காக அணுகிய போது, நான் ஏன் வேண்டாமென சொன்னேன் என்பதை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்ட சக பிரபலங்களும், டிடி ரசிகர்களும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”