முடிவுக்கு வந்த 3 ஆண்டு சீரியல்… மொத்தமாக கூடி ‘பை’ சொன்ன நடிகர்- நடிகைகள்!

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருவதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர். சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கில், நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ‘டாட்டா Bye Bye’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

Vijay TV, Vijay TV serial, Eeramaana Rojaave Serial gets end, Eeramaana Rojaave Serial team says good bye, Eeramaana Rojaave Serial, Eeramaana Rojaave, விஜய் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருகிறது, குட் பை சொன்ன ஈரமான ரோஜாவே சீரியல் குழு, வெற்றி மலர், பவித்ரா, திரவியம், vettri malar, pavithra, dhraviyam, Eeramaana Rojaave Serial farewell

விஜய் டிவியில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே’ சீரியலும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் பார்வையாளர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளது. ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்ற ஈரமான ரோஜாவே சிரியல் முடிவுக்கு வந்துள்ளது. தயாரிப்புக் குழுவினர் இப்படி திடீரென சீரியலை முடித்ததால் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருவதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கில், நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ‘டாட்டா Bye Bye’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்திரி, குழுவினருடன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஏற்கெனவே ஒரு யூகத்தை உறுதிப்படுத்தினார். இந்த சீரியலில் மலராக பவித்ரா நடித்தார். அதே போல, திரவியம், வெற்றி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதில் வெற்றி – மலர் மற்றும் புகழ் – அகிலா ஜோடிக்காகவே பலரும் இந்த சீரியலை ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.

சீரியலில் வெற்றி – மலர், புகழ் – அகிலா இடையேயான காதல் காட்சிகளில் ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ரசித்தனர். ஈரமான ரோஜாவே டி.ஆர்பியிலும் கௌரவமான இடத்திலேயே இருந்தது. இப்படி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஈரமான ரோஜா சீரியல் முடிக்கப்படுவதால் ரசிகர்கள் பலரும் சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சீரியல் முடிவதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள் சீரியல் குழுவினர் பதிவிட்டுள்ள ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Web Title: Vijay tv eeramaana rojaave serial gets end team say good bye

Next Story
Vijay TV Serial : லக்ஷ்மியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிச்செல்லும் பாரதி… கண்ணம்மா குழந்தைனு தெரியவருமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com