Advertisment
Presenting Partner
Desktop GIF

கணவரிடம் விவாகரத்து கேட்டு பிரபல டிவி தொகுப்பாளர் டிடி மனுத் தாக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி, தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கணவரிடம் விவாகரத்து கேட்டு பிரபல டிவி தொகுப்பாளர் டிடி மனுத் தாக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி, தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. (விஜய் டிவி) 'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடப்பதற்கு டி.டி கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்த்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.

இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும் அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கபடும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment