scorecardresearch

வாசன் கட்சியில் விஜய் டி.வி ராமர்? விவாத நிகழ்ச்சி போட்டோ ஷாக்

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராமர்

Vijay Tv Ramar
விஜய் டிவி ராமர்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான ராமர் டிவி விவாத நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றதாக வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராமர், தொடர்ந்து அது இது எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், ராமர் வீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் பெண் வேடத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும ரசிகர்கள் மத்தியிலர் வரவேற்’பை பெற்றிருந்தது.

அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ரீக்கிரியேட் செய்து சொல்வதெல்லாம் பொய் என்று நடத்தி புகழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பெண் நடுவராக வரும் ராமர் என்னம்மா நீங்க இப்படி பண்றீகளேமா என்ற டைலாக் பெரும் பிரபலம். இன்றுவரை அந்த டைலாக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்பு பெற்ற ராமர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ராமர் ஒரு நகைச்சுவை கலைஞர் மட்டுமல்லாமல், கொட்டாம்பட்டி பகுதியில் ஒரு கிராமத்தின் நிர்வாக அலுவலர் என்று எம்.பி.சு.வெங்கடேன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதே சமயம் ராமருக்கு பலரும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். இதனிடையே தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிக்குள்ளாகும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையான புகைப்படம்

டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் உண்மை என்று நம்பி பலரும் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் அரசு அலுவலர் எப்படி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க முடியும் ஒன்று ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படம் போலியானது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரின் முகத்தின் மேல் ராமரின் முகத்தை மாற்றி வைத்துள்ளனர். இந்த பதிவுக்கு கீழ் தாமாக சார்பில் பங்கேற்ற உண்மையான நபரின் படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv fame ramar in tamil manila congress photos viral

Best of Express