/tamil-ie/media/media_files/uploads/2023/06/KPY-Dheena.jpg)
கலக்கப்போவது யாரு தீனா
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தீனாவுக்கு நாளை திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களின் திறமையை கண்டறிந்து வாய்ப்பு கொடுப்பதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஷோக்களில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்த பலரும் இன்று தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு ஷோவின் மூலம் பிரலமானவர் நடிகர் தீனா.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/KPY-Deena-1.jpg)
ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான, தீனா நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கெ டஃப் கொடுக்கும் அளவுக்கு காமெடியில் அசத்தியவர். எவ்வளவு கேள்வி எழுப்பினாலும் அதற்கு சாதாரனமாக கவுண்டர் கொடுத்து அசத்தி வரும் தீனா திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விஜய் டிவியில் துணை இயக்குனராக இருந்து பின்னர் போட்டியாளராக மாறிய தீனா தற்போது சினிமாவில் நடிகராகவும் உயர்ந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/KPY-Deena-3.jpg)
இதில் கைதி படத்தில் கார்த்தியுடன் நடித்த தீனா பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இதனிடையே சமீபத்தில் சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வீடு கட்டிய தீனா தனது வாழ்வின் அடுத்தக்கட்டமாக திருமண பந்தத்தில் இணைய உள்ளார். நாளை அவரது சொந்த ஊரான திருவாரூரில் நடைபெறும் இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/KPY-Deena-2.jpg)
மேலும் தீனாவின் வருங்கால மனைவி ஒரு கிராபிக் டிசைனர் என்றும், இந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தீனாவின் திருமண தகவலை அறிந்த ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.